இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியை மனதார காதலிப்பதாக பொலிவுட் நடிகையும், மொடலுமான பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். 

பல சர்ச்சைகளைக் கிளப்பிய பூனம் பாண்டே, அண்மை காலமாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது மற்றுமொரு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பூனம் பாண்டயிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அவர்  ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

 

சர்ச்சையை கிளப்ப புதிய ஐடியாக்கள் கிடைக்கவில்லை. 

ஆனால் விரைவில் ஐடியா கிடைத்து சர்ச்சையை கிளப்புவேன். 

கிரிக்கெட் வீரர் விராட் கோலியை யார் தான் காதலிக்க மாட்டார்கள். நான் அவரை மனதார காதலிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.