மியன்மார் பொதுத் தேர்­தலில் தனது கட்சி பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்று வெற்றிபெறும் என நம்­பு­வ­தாக தேசிய ஜன­நா­யக லீக் கட்­சியின் தலைவர் ஆங் சான் சூகி தெரி­வித்தார்.
மேற்­படி வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க தேர்தல் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அவர் அளித்த முதல் பேட்­டியின் போதே இவ்­வாறு கூறினார்.

ஆரம்ப தேர்தல் பெறு­பே­று­களின் பிர­காரம் இந்தத் தேர்­தலில் ஆங் சான் சூகியின் கட்சி மாபெரும் வெற்றி நிலையில் உள்­ளது. எனினும் இறுதிப் பெறு­பே­றுகள் வெளி­வ­ரு­வ­தற்கு மேலும் சில நாட்கள் செல்­லலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


இந்தத் தேர்தல் கடந்த 25 வருட காலப் பகு­தியில் மியன்மார் எதிர்­கொண்ட மிகவும் ஜன­நா­யக ரீதி­யான தேர்­த­லாக உள்­ளது. இந்­நி­லையில் ஆங் சான் சூகி இந்தத் தேர்­த­லி­லான வாக்­கெ­டுப்­புகள் நியா­ய­மான முறையில் இடம்­பெ­ற­வில்லை என்ற போதும் அவை பெரு­ம­ளவில் சுதந்­தி­ர­மான முறையில் நடந்­தே­றி­ய­தாக குறிப்­பிட்­டுள்ளார்.


பல பிர­தே­சங்­களில் கட்­டா­யப்­ப­டுத்தி வாக்­க­ளிக்க வைக்கும் செயற்­கி­ர­மங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.


மியன்மார் பாரா­ளு­மன்­றத்­தி­லான 664 ஆச­னங்­களில் சுமார் கால் பங்கு ஆச­னங்கள் இரா­ணு­வத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளன. அதனால் பாரா­ளு­மன்­றத்­தி­லான பெரும்­பான்­மையை உறுதி செய்து கொள்ள தேசிய ஜன­நா­யக லீக் கட்சி போட்­டி­யி­டப்­படும் ஆச­னங்­களில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­களைப் பெற்றுக்கொள்ள வேண்­டி­யுள்­ளது.
இந்­நி­லையில் மேற்­படி தேர்­தலில் தனது கட்சி 75 சத­வீத வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் என ஆங் சான் சூகி நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.


இது­வரை வெளி­யான தேர்தல் பெறு­பே­று­களின் பிர­காரம் பாரா­ளு­மன்ற கீழ் சபைக்­கான 440 ஆச­னங்­களில் 88 ஆச­னங்கள் மட்­டுமே தற்­போது அறி­விக்­கப்­பட்­டுள்ளன.அந்த ஆச­னங்­களில் 78 ஆச­னங்­களை தேசிய ஜன­நா­யக லீக் கட்சி வென்­றெ­டுத்­துள்­ளது. மேற்­படி தேர்­தலில் வாக்­க­ளிக்க சுமார் 30 மில்­லியன் பேர் தகு­தி­பெற்­றி­ருந்­தனர்.


ரோஹிங்யா முஸ்­லிம்கள் உட்­பட அந்­நாட்டின் பிர­ஜை­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு இந்த தேர்­தலில் வாக்­க­ளிக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
ஆங் சான் சூகியின் கட்சி உட்­பட பல கட்­சிகள் முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்தத் தவ­றி­யி­ருந்­தமை முஸ்லிம் சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் கடும் கண்­ட­னத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.


இது தொடர்பில் ஆங் சான் சூகி விப­ரிக்­கையில்இ தனது கட்சி முஸ்­லிம்­களை பாது­காக்கும் எனவும் இன வெறுப்­பு­ணர்வை பரப்­பு­ப­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­டு­வார்கள் எனவும் கூறினார். மியன்மார் தேர்தல் ஆணை­யகம் திட்­ட­மிட்டே தேர்தல் பெறு­பே­று­களை தாம­தப்­ப­டுத்­து­வ­தாக தேசிய ஜன­நா­யக லீக் கட்­சியின் பேச்­சாளர் வின் ஹடெயின் குற்­றஞ்­சாட்­டினார்.


அந்­நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகிக்க தடையை எதிர்­கொண்­டுள்ள ஆங் சான் சூகிஇ தான் எந்தவழி வகையிலாவது நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்தவுள்ளதாக சூளு ரைத்துள்ளார்.


அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி யொருவரை தான் நியமிக்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்த ஆங் சான் சூகி, தான் வெற்றி பெற்ற கட்சியின் தலை வராக தொடர்ந்து கடமையாற்றுவதை எவ ராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.