(ஆர்.விதுஷா)

நல்லாட்சி அரசாங்கத்தில் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாக  கூறப்படும் ஊழல் மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ள  நடவடிக்கைகளை எடுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவிற்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. 

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தூதுக்குழு வொன்று  இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவருடைய  உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்திருந்த நிலையிலேயே  அவர்கள்  இவ்வாறு நன்றி  தெரிவித்துள்ளனர்.