எதிர்லரும் 24 மணித்தியாள காலப்பகுதியில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு நிலைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.

நவம்பர் 30ம் திகதி முதல், டிசம்பர் 1 மற்றும் 2ம் திகதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

தமிழகத்தின் கடலோர மற்றும் அதனை ஒட்டி உள்ள உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையின் தெற்கு கடற்பகுதியில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மேற்கூரிய இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று புவியரசன் கூறியுள்ளார்.