முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, தேசிய சுதந்திர முன்னணியின் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி ஆகியோர் இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் லலித் வீரதுங்க சில வாகனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்த குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் வாக்கு மூலம் வழங்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

மேலும், வீடமைப்பு திட்டமொன்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக ஜயநத் சமரவீரவும் அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிசாங்க சேனாதிபதியும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.