(ஆர்.யசி)

சுவிஸ் தூதரக பணியாளர் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்து எந்த காரணிகளையும் கூறமுடியாதுள்ளது, ஏனெனின் எமக்கு இது குறித்து சரியாக தகவல்கள் தெரியவில்லை என்கின்றனர் ஆளும் கட்சியினர். எவ்வாறு இருப்பினும் இந்த குற்றச்சாட்டு குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். 

சுவிஸ் தூதரக பணியாளர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருந்தது. இந்த விவகாரம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்ற சர்வதேச ஒத்துழைப்புக்கள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் இது குறித்து வினவிய போது அவர் கூறுகையில், 

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்த நிலையில் சந்திப்பு குறித்து அவரிடம் வினவியபோது அவர் கூறுகையில்:- 

சுவிஸ் தூதரக சம்பவம் குறித்த விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. தூதுவரை சந்தித்த வேளையிலும் இது குறித்து அதிக கவனம் செலுத்துவதாக நாம் கூறியுள்ளோம்.  இதற்கு சுவிஸ் தூதரகத்தின் ஒத்துழைப்புகள் வேண்டும். அதனையும் தெரிவித்தோம் என்றார்.