இன்றும் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்கள்..!

By J.G.Stephan

28 Nov, 2019 | 03:51 PM
image

(எம்.மனோசித்ரா)

இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்காக நியமிக்கப்பட்ட இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர்  இன்றும், வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

அதற்கமைய மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சில் இன்ற(28.11.2019) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது 'ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்துக்கு ஏற்ப நாட்டில் அனைத்து மக்களுக்கும் தடையின்றி 24 மணித்தியாலயங்களும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதே தமது இலக்கு ' என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

இதே வேளை , மஹிந்த சமரசிங்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

 மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக ரொஷான் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதோடு இந்நிகழ்வில் அமைச்சர் சமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். 

துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேராத்  இன்று அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.                                                 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right