(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பரீட்சை நடத்துவதற்கு முன்னரோ அல்லது பரீட்சை நடைபெறும் தினங்களில் எந்த இடையூம் இன்றி சுகாதார வைத்திய அதிகாரியுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கிறது.

 பாடசாலைகளுக்கான மூன்றாம் தவனை காலம் முடிவுற்று 2020 ஆம் ஆண்டின் முதலாம் தவனைக்காலம் ஆரம்பமாகுவதற்கு முன்னர் பெற்றோர்களை இணைத்துக கொண்டு பாடசாலை சுற்று சூழலை டெங்கு நுளம்பு தாக்கமற்ற பாதுகாப்பான சுற்று சூழலாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

எனினும் பரீட்சைக்கு முன்னர் பாடசாலைகளுக்குள் பாதுகாப்பான சுற்று சூழலை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் கல்லூரிகளிலும் வலய மற்றும் வட்டார கல்வி காரியால நிறுவனங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.