வரிகள் குறைப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழுமையான பலனை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் வரி குறைப்பினை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் பலாபலனை பெற்றுக்கொள்ளும் வகையில்  வணிக நிறுவனங்கள்  செயற்பட வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

வரிக்குறைப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதை போன்று டிசம்பர் முதலாம் திகதி முதல் பல வரிகளை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற போதிலும் , வழமைபோன்று வரிக்குறைப்பின் பலாபலன்கள் வாடிக்கையாளர்களுக்கு சென்றடைய கூடியதாக வணிக நிறுவனங்கள் இடமளிக்காத நிலமையை அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்ட வரிக்குறைப்பின் பலன் எதுவும் இல்லை.

பெறுமதி சேர்க்கப்பட்ட வட் வரி 15 வீதத்தில் இருந்து 8 வீதமாகவும் , பொருளாதார சேவைக்கான கட்டண வரி, பங்கு சந்தை மூலதன வரி, பிடித்து வைத்தல் வரி , வரவு வரி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி என்பன குறைப்பட்டுள்ள நிலையில் அதற்கான முழுமையான பலனை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். 

வரி குறைப்பினை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் பலாபலனை பெற்றுக்கொள்ளும் வகையில்  வணிக நிறுவனங்கள்  செயற்பட வேண்டும்.