இன்று மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் 400க்கு மேற்பட்டோர் தங்களது மாதாந்த சிகிச்சைக்காக அதிகாலை முதல் வைத்தியசாலையில் வரிசைலிருந்த போதும் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரியும், வைத்திய அதிகாரி ஆகிய இருவரும் சுகவீன விடுமுறையில் உள்ளதால் நோயாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் சாமிமலை வைத்தியாலையின் வைத்திய அதிகாரியும், உதவி சுகாதார வைத்திய அதிகாரியும் தற்காலிகமாக பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட உயர் அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்ட போது 3 பேரும் சுகவீன விடுமுறையில் உள்ளதால் தற்காலிகமாக இந்த இரண்டு வைத்தியரையும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இவ்வைத்திசாலையின் குறைபாடுகளை நீக்க வேண்டுமாயின், 3000 வைத்தியர்கள் உள்வாங்கப்படவுள்ள நியமனங்களிலிருந்து இவ்வைத்தியசாலைக்கு வைத்தியர்களை அரசு வழங்கும் பட்சத்தில் இப்பற்றாக்குறை நிவர்த்தியாகும் என குறிப்பிட்டார்.

இது குறித்து மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி அமைச்சர் ஆறுமுக தொண்டமானுக்கு தெரிவித்தை தொடர்ந்து  அமைச்சர் நுவரெலியா மாவட்ட சுகாதார அத்தியட்சகர் சேனக்க தலகலவிடம்  மஸ்கெலியா வைத்தியசாலை தொடர்பான குறைபாடுகளை ஜனாதிபதியிடனும் சுகாதார அமைச்சரருடனும் கலந்துரையாடல் நடாத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.