தாய்லாந்தில் இறந்த மானின் வயிற்றில் இருந்து சுமார் 7 கிலோ பிளாஸ்ரிக் உட்பட குப்பைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மான், பிளாஸ்ரிக் பைகள் மற்றும் கழிவுகளை உட்கொண்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகரான பெங்கோக்கில் உள்ள நன் மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய பூங்காவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ள குறித்த மானை உடற்கூராய்வு பரிசோதனை செய்யும்போது அதன் வயிற்றினுள் 7 கிலோ பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் கழிவுகள் இருந்துள்ளதாக கால்நடை வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து தேசிய பூங்காவில் பிளாஸ்ரிக் பாவனையை குறைத்துக்கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.