அரசியல்வாதிகளின் பொய்களை பொதுமக்கள் நம்பிவிடக் கூடாது - புதிய தேசிய முன்­னணி

Published By: Digital Desk 3

28 Nov, 2019 | 12:13 PM
image

ஜன­நா­யகம் இல்­லாத ஒரு ஆட்­சியை மக்கள் தவிர்க்க வேண்டும். அர­சியல் வாதி­களின் பொய்­யான வாக்­கு­று­தி­களை மக்கள் நம்­பு­வது  மக்­க­ளுக்கு தீங்­கான ஒன்­றாகும் என்று புதிய தேசிய முன்­னணி தெரி­வித்­துள்­ளது.   இந்த முன்­ன­ணியின் தலைவர் ஜே.கண்­டம்பி விடுத்­தி­ருக்கும் அறிக்­கையில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,  

நிறை­வே­றாத பொய் வாக்­கு­று­தி­களை மக்­க­ளுக்கு வழங்கி  எதிர்வரும் பொதுத் தேர்­தலில் தங்­களின் பத­வி­களை தக்­க­வைத்துக் கொள்ள தற்­போ­தைய அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. பொதுத் தேர்­த­லுக்கு மூன்று மாத காலங்கள் இருக்கும் நிலையில் தங்­களின் ஆட்­சியை தக்­க­வைத்துக் கொள்ள முனை­கின்­றனர். தேர்­தலின் பின்­ன­ரான காலங்­களில் அவர்­களின் குடும்ப ஆட்சி தலை­தூக்க ஆரம்­பிக்கும்.

மக்கள் பொய், உண்மைத் தன்­மை­களை புரிந்து தீர்க்­க­மான முடி­வுகள் எடுக்க வேண்டும். நாட்டில் காணப்­படும் வரி­களை குறைத்து சம்­பள உயர்­வினை வழங்க இந்த அர­சாங்­கத்­தினால் முடி­யுமா?   திவி­நெ­கும செயற்றிட்­டத்தின் மூலம் நாட்டின் விவ­சாய உற்­பத்தி குறை­வ­டைந்து சென்­றதைக் கண்டோம். நாட்டில் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்­தங்­கள் ஏற்­ப­டு­கின்ற நிலை­மை­களின் போது எந்த ஒரு அர­சியல் வாதியும் மக்­களை சந்­திக்க  செல்­வது குறை­வாகும். சுற்­றுலா செல்­வதைப் போலவே செல்­கின்­றனர். மாவோ சேதுங் போல மக்­களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த அர­சியல் தலை­வரும் செயற்­ப­டு­வ­தில்லை.

சிறு­பான்மை, பெரும்­பான்மை என்ற பேதம் எங்­கி­ருந்து உரு­வா­னது. 2 கோடி மக்கள் வாழும் இலங்கை நாட்டில் அதிக பெரும்­பான்மை உடை­ய­வர்கள் சிங்­க­ள­வர்கள். ஆனால்  தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் உலகின் அனைத்துப்  பகு­தி­க­ளிலும் பரந்து வாழ்­கின்­றனர்.

மக்கள் நன்மை, தீமை என்­ப­வற்றை பிரித்­தெ­றிந்து அர­சியல்வாதி­களின் பொய் வாக்­கு­று­தி­களை நம்பி ஏமா­றாமல் நடு­நி­லை­யாக தங்­களின்  தீர்மானங்களை எடுக்க  வேண்டும். புலனாய்வுப் பிரிவினர் அரசியல் வாதிகளைப் பாதுகாக்க மட்டுமே செயற்படுகின்றனர். மக்களைப் பற்றிய எவ்வித அக்கறையும் அவர்களுக்கு இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41