மித்திர சக்தி – VII கூட்டுப் படைப் பயிற்சி இந்தியாவில் ஆரம்பம்

Published By: R. Kalaichelvan

28 Nov, 2019 | 10:37 AM
image

மித்திர சக்தி – VII கூட்டுப் படை இராணுவ பயிற்சியானது இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினரை உள்ளடக்கி இந்தியாவில் பூனே பிரதேசத்தில் உள்ள குமாஓன் படை முகாம் வளாகத்தில் ஞாயிற்றுக் கிழமை (01 டிசெம்பர்) இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 120 படையினர்கள் மற்றும் இந்திய இராணுவ குமாஓன் படைத் தலைமையக படையினரை உள்ளடக்கி இடம் பெறவுள்ளது.

அந்த வகையில் இருவார கால இராணுவப் பயிற்சியானது ஏழாவது தடவையாக இடம் பெறவுள்ளதுடன் இப் பயிற்சிகளில் படைகளிற்கிடையிலான இயங்கு தன்மை இராணுவ ஒத்துழைப்பு கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகள் இராணுவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் மற்றும் எதிர்காலத்தில் எவ்வாறான பாதுகாப்பு அச்சுருத்தல்களையும் எதிர்கொள்ளும் போன்றன மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இந்திய இராணுவப் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம் மித்திர சக்தி எனும் கூட்டுப் படைப் பயிற்சியானது கெமுனு ஹேவா படையணியின் 11 அதிகாரிகள் மற்றும் 109 படையினர்களை உள்ளடக்கி இடம் பெறவுள்ளதுடன் இப் பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தியாவிற்கான பயணத்தை வெள்ளிக் கிழமை (29) மாலை இப் படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும் இம் மித்திர சக்கி கூட்டுப் படை வருடாந்த பயிற்சியானது 2012ஆம் ஆண்டு முதல் இவ்விரு படைகளிற்கிடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்கமைய இராணுவ புரிந்துணவர்வு மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இப் பயிற்சிகள் மூன்று தடவைகள் இந்தியாவிலும் மற்றும் மூன்று தடவைகள் இலங்கையிலும் இடம் பெற்றன.

மேலும் இவ் வருடாந்த கூட்டுப் படைப் பயிற்சியானது இராணுவ அனுகுமுறை அனுபவங்கள் காலாட் படையணி அனுகுமுறை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை முறைகள் நீண்ட தூர ரோந்து நடவடிக்கைகள் சிறிய குழுக்களாக செயற்படும் நடவடிக்கை முறைகள் காலாட் படையணி ஆயுத முறைகள் பயங்கரவாதத்தின் போதான தாக்குதல் உத்திகள் ஸ்நைபர் முறைகள் தற்கொலை தாங்குதல்கள் ஐஈடீ தாக்குதல் உத்திகள் போன்றன இவ்விரு இராணுவ படையினரிடையே மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவ காலாட் படையணி பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் மனோச் முத்தநாயக்க மற்றும் அவர்களுடன் பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன அவர்களின் தலைமையில் இப் பயிற்சிகளுக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக் கூட்டுப் படை பயிற்சிகளில் மூத்த ஒருங்கிணைப்பாளராக மற்றும் கண்காணிப்பாளராக கேர்ணல் பாதிய முதன்நாயக்க காணப்படுவதுடன் மேஜர் ருவன் எதிரிசிங்க அவர்கள் பயிற்சிகளின் நடத்துனராக மித்திரசக்தி V11 கூட்டுப் படைப் பயி;ற்சிகளில் காணப்படுவாரென எதிர் பார்க்கப்படுகின்றது. (முடிவு).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-24 06:37:57
news-image

வாக்குகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் பொய்யான...

2025-03-24 03:22:42
news-image

நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள்...

2025-03-24 03:16:05
news-image

சர்வதேசத்தின் மத்தியில் பாதுகாப்பு படையினரை காட்டிக்...

2025-03-24 03:09:11
news-image

சீனாவின் K-18 விமானங்களை பரிசோதனை செய்கிறது...

2025-03-24 03:04:35
news-image

ஐ.தே.க. உறுப்பினர்களுடன் இணைந்து சபைகளை நிறுவுவோம்...

2025-03-24 03:02:35
news-image

மக்களுக்கான நன்மைகளை படிப்படியாக அழித்து வரும்...

2025-03-23 17:54:24
news-image

நாணய நிதியத்தின் தேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்ஜட்...

2025-03-23 16:42:49
news-image

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையைப் பாதுகாக்க...

2025-03-23 16:34:05
news-image

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில்...

2025-03-23 21:51:48
news-image

ஏப்ரல் 28 இல் ஆய்வுக்காக இலங்கை...

2025-03-23 17:55:39
news-image

யோஷிதவுடன் இரவு விடுதிக்கு சென்றவர்கள் -பாதுகாப்பு...

2025-03-23 21:09:20