கல்கமுவ - அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையில் யாழ் தேவி ரயில் தடம் புரண்டமையால் நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மஹோ மற்றும் கல்கமுவ ரயில் நிலையங்களில் இருந்து இன்று ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, மஹோ மற்றும் கல்கமுவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் ரயில் பாதை சேதமடைந்துள்ளமையால், குறித்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிகளுக்கு விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பயணிகள் ரயிலில் ஏறி தங்கள் பயணத்தைத் தொடர முடியும்.
பயணிகள் குறித்த இரு ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்ல பஸ் டிக்கெட்டை வாங்க வேண்டியதில்லை, ஆனால் நிலையங்களிலிருந்து வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பஸ் வண்டிகளில் பயணிக்கமுடியும்.
தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சேதமடைந்த ரயில் பாதையை புனரமைக்க மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, கல்கமுவ ரயில் நிலையத்திற்கு அருகே காங்கேசன்துறை - யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில் தடம் புரண்டதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM