இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரத்தில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்னர். 

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் தொழில்புரியும் உள்ளூர் பெண் உழியர் ஒருவர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தலுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை நேற்றைய தினம் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இதன்போது கடத்தப்பட்ட பெண்ணிடம் அச்சுறுத்தல்காரர்கள் தூதரகம் தொடர்பான தகவல்களை வழங்குமாறும் கோரியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து உடனடியாக இந்த சம்பவத்தை இலங்கை அதிகாரிகளிடம் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உடனடி மற்றும் முழுமையான விசாரணையை கோரியுள்ளது.

இந் நிலையிலேயே இது தொடர்பான விசாரணைகளை சி.ஐ.டி.யினரும், பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.