ஏற்றுக்கொள்ள முடியாத வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர்

Published By: MD.Lucias

04 Dec, 2015 | 10:17 AM
image

 

ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் முன்னுக்குப் பின் முரணான காரணங்களை முன்வைத்து  வைத்திய அதிகாரிகள்  வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். ஆனால் அனைத்து வைத்தியசாலைகளிலும்  முடியுமான வரை  உயர்ந்மட்ட சேவையை அரசாங்கம் வழங்குகின்றது. பொதுவாக அனைத்து  மருத்துவமனைகளிலும்  சேவைகள் சிறப்பாக உள்ளன  என்று   அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற  வாராந்த அமைச்சரவை  முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்  என்னுடன்  சில தினங்களுக்கு முன்னர் மணித்தியாலய கணக்கில் பேச்சு நடத்தினர்.    அப்போது சில விடயங்களில்  உடன்பாடுகள் எட்டப்பட்டன. பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததும்   வேலை நிறுத்தம் குறித்து எதனையும் கூறாமல் சென்றனர். ஆனால்  இன்று ( நேற்று) காலை முதல் வேலை நிறுத்தத்தை  தொடங்கியுள்ளனர். இது தொடர்பில் நாங்கள் வேதனை அடைகின்றோம். 

அடிப்படை சம்பளத்துடன்  கொடுப்பனவை இணைக்கவேண்டும் என்றும்  வாகன அனுமதி பத்திரம் வழங்கவேண்டும் என்றும் முதலில் கோரிக்கை விடுத்தனர். அடிப்படை சம்பளத்துடன்  கொடுப்பனவை இணைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என   நாங்கள் கூறியுள்ளோம். வாகன அனுமதி பத்திர விடயத்திலும்   ஊழியர்களுக்கு    பயன்கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதனை  கலந்துரையாடலின்போது அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.   வாகன அனுமதி பத்திரத்துக்காக  80 பிலலியன் ரூபா செலவாகின்றது.   ஒரு வருடத்துக்கு   நாட்டுக்கு மருந்து கொள்வனவு செய்யும் தொகையாகும். ஆனால் இதில்   50000 பேர்  பயனடைகின்றனர்.   அதனால்தான்  மாற்றுத்திட்டம் குறித்து சிந்திக்கின்றோம். 

ஆனால்  இன்று ( நேற்று ) வேறு காரணங்களை கூறிவிட்டு   வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனினும்   கொழும்பு  தேசிய வைத்தியசாலையில்  செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.  வெளி நோயாளர் பிரிவில் மட்டும்  ஒரு பிரிவில் சிக்கல் காணப்படுகின்றது.     புற்றுநோய் வைத்தியசாலை காசல்  சிறுவர் வைத்தியசாலை என அனைத்தும்  இயங்குகின்றனர்.  ஒரு சில இடங்களில்     பிரச்சினைகள் உள்ளன. 

அரச ஊழியர்களின்  ஓய்வூதியத்தில் அரசாங்கம் கை வைத்துவிட்டதாம்.     ஆனால்  தற்போதைய  ஓய்வூதிய திட்டத்துக்கு பதிலாக  பங்களிப்பு முறை கொண்ட ஒரு புதிய முறைக்கு செல்லவேண்டியது அவசியமாகும். 

ஆனால் இவற்றை புரிந்துகொள்ள முடியாதவர்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வைததியர்கள் ஏன்  வேலை நிறுத்தம் செய்யாமல்  இருக்கின்றனர் என்று அண்மையில்  மஹிந்த ராஜபக்ஷ கேட்டிருந்தார்.  அதனால்தான் இவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் போல் தெரிகின்றது. 

அது மட்டுமன்றி  வரவு செலவுத்திட்டததின் போது உடனடியாக எதனையும் செய்துவிட முடியாது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க   தனது தோட்டத்தை விற்றுவிட்டு    நிதி கொண்டுவருவாரா?  இவை  தொடர்பில்  தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி  தீர்மானம் எடுக்கவேண்டும்.  நிதானமாக செயற்படவேண்டும்.    ஏன் இவர்கள்  இவ்வாறான கோரிக்கைகளை  கடந்த  9 வருட காலத்தில் மேற்கொள்ளவில்லை.   மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரத்துக்கும் கோத்தபாய ராஜபக்ஷவின்  துப்பாக்கிக்கும் பயந்தனரா? என்று கேட்கின்றாம். 

சீனா

சீனாவின்  கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்   தொடர்பில் மீளாய்வு அறிக்கை வந்ததும்   எமது  யோசனைகளை    சீனா ஏற்றுக்கொண்டால்   அதனை நடைமுறைப்படுத்த முடியும்.   ஆறு மாத காலத்துக்கு  அதனை நிறுத்தி வைத்துள்ளோம்.    தற்போது சுற்றாடல் அறிக்கை வந்ததும்  அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கவேண்டும். அத்துடன்   எமது  பரிந்துரைகளை சீனா ஏற்றுக்கொண்டால்   திட்டத்தை மீள ஆரம்பிக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38