தென்னாபிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது வீதியில் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் முன் டயர்கள் இரண்டும் கார் மீது ஏறியமையினால் குறித்த காரிலிருந்த 26 வயதுடைய பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த அனர்த்தம் காரணமாக பலத்த காயமடைந்த குறித்த பெண் சுமார் 40 நிமிட போராட்டத்தின் பின்னர் மீட்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.