ஐ.தே.க. தலைமையின்  துரோ­கத்தால் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளது தமிழ் பேசும் சமூகம் - உது­மா­லெப்பை

27 Nov, 2019 | 03:57 PM
image

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியின் வர­லாற்றுத் துரோ­கத்தால் அக்­கட்­சியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தோல்­வி­ய­டைந்­தது மட்­டு­மல்­லாது ஜன­நா­ய­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து செயற்­பட்ட தமிழ் பேசும் சமூ­கங்­களும் அதிர்ச்­சியில் உள்­ளன என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உது­மா­லெப்பை தெரி­வித்தார்.

 ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளித்த  அட்­டா­ளைச்­சேனைப் பிர­தேச மக்­க­ளுக்கு நன்றி தெரி­விக்கும் கூட்டம் நேற்­று­முன்­தினம் அட்­டா­ளைச்­சே­னையில் இடம்­பெற்­றது.  அந்­நி­கழ்வில்  கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்­றிக்கு ஐக்­கிய தேசிய கட்சி பெரும் பங்­க­ளிப்புச் செய்யும் என்ற நம்­பிக்­கை­யுடன் பங்­காளிக் கட்­சிகள் தங்­களின் முழுச் சக்­தி­யையும் பாவித்து தமிழ் பேசும் மக்­களின் வாக்­கு­களை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வழங்­கின. ஆனால் ஒரு அர­சியல் கட்­சியின் சார்பில் அந்தக் கட்­சியின் வேட்­பா­ளரை போட்­டி­யிட வைத்து அந்தக் கட்­சியின் தலை­வரும் சிரேஷ்ட அமைச்­சர்­களும் மேற்­கொண்ட துரோ­கத்­த­னத்தால் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச தோல்வி அடைந்­த­தாக ஐ.தே.கட்­சியின் அமைச்சர்  நளின் பண்­டார பகி­ரங்­க­மா­கவே குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

அது மாத்­தி­ர­மின்றி இத்துரோக செயற்­பாட்டை கண்­டிக்கும் முக­மாக எதிர்வரும் மார்ச் மாதம்வரை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் இயங்க வேண்­டிய அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து தங்­களின் அமைச்சுப் பத­வியை ராஜி­னாமா செய்­த­துடன் உட­ன­டி­யாக பிர­தமர் பத­வியிலிருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­ இ­ரா­ஜி­னாமா செய்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு  பிர­தமர் பத­வியை வழங்க வேண்டும். இதற்கு இணங்க மறுத்தால் தாங்கள் மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தம மந்­தி­ரி­யாக நிய­மிப்­ப­தற்­கான ஆத­ரவை வழங்கப் போவ­தாக ஐ.தே.கட்­சியின் சிரேஷ்ட அமைச்­சர்கள் தெரி­வித்­ததால் வேறு வழி­யின்றி பிர­த­ம­ராக இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது பத­வியை முன்கூட்­டியே இரா­ஜி­னாமா செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.

முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல் சூட்­சு­மங்­களை அறிந்தே மறைந்த எமது பெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஐ.தே.கட்­சியின் தலை­வ­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்க இருக்கும்வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸூம் முஸ்­லிம்­களும் ஒருபோதும் ஐ.தே.கட்­சியை ஆத­ரிக்­க­மாட்டோம் என்ற தூர­நோக்­கான சிந்­த­னையை அன்று முஸ்லிம் சமூ­கத்­திடம் தெரி­வித்­தி­ருந்தார்.

ஜன­நா­ய­கத்தை மதிக்கக்கூடிய ஐ.தே.கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச ஐ.தே.கட்­சியின் புதிய எழுச்­சி­யுடன் சிறு­பான்மை மக்கள் நம்­பிக்கை வைத்து ஆத­ரவு வழங்கக்கூடிய நிலை­மையை உரு­வாக்கி, தான் ஜனா­தி­பதி தேர்­த­லிலே வெற்றி பெற்றால் நாட்டில் வாழும் சகல இன மக்­களும் தத்­த­மது மதச் சுதந்­தி­ரத்­து­டனும் கலா­சார விழு­மி­யங்­க­ளு­டனும் நிம்­ம­தி­யாக வாழும் நிலை­மையை உரு­வாக்கி வறு­மையை ஒழித்து நமது நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கு­வ­தாக தெரி­வித்­தி­ருந்தார்.

இதனால் வடக்கு, கிழக்­கிலே வாழும் தமிழ் பேசும் சமூகம் ஒன்­றி­ணைந்து ஜனா­தி­பதி தேர்­த­லிலே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு வாக்­க­ளித்­தனர். ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ்– முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் விடுத்த வேண்­டு­கோளை ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் சமூ­கங்கள் செயற்­பட்­டுள்­ளன.

ஜன­நா­யக ரீதியில் எமது மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­ரி­மையை எமக்கு விரும்­பிய வேட்­பா­ள­ருக்­காக வழங்­கி­யுள்ளோம். எதிர்காலத்தில் எல்­லோரும் ஒற்­று­மை­யாக செயற்­பட்டு நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற தேர்­தலில் நமக்­கான உச்ச அளவில் பாரா­ளு­மன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்று எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்து காட்டுவதற்கு அனைவரும் உறுதி பூணவேண்டும்.

இதேவேளை, புதிய    ஜனாதிபதி   கோத்தபாய ராஜபக் ்ஷ தலைமையிலுள்ள அரசாங்கம் நல்ல செயற்பாடுகளையும், சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளையும்  வெல்லக் கூடிய  சிறந்த வெளிப்பாடுகளை முன்கொண்டு செல்லுமாயின் சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்ல முடியும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30