(தி.சோபிதன்)

வாக்­க­ளித்த தமிழ் மக்­க­ளுக்கு சஜித் பிரே­ம­தாச நன்றி தெரி­விக்­க­வில்லை என்­ப­தனைக் கண்­டு­பி­டித்த வடக்கு மாகா­ண­ச­பையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவ­ராசா, புதிய ஜனா­தி­பதி கோத்­த­பா­ய­வுக்கு வடக்கில் வாக்­க­ளித்த தமி­ழர்­க­ளையும் சிங்­கள மக்­க­ளாக மாற்­றி­யதை அறி­ய­வில்­லையா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்­பினர் து.ரவி­கரன் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக இரு சிங்­கள பிர­தான வேட்­பா­ளர்கள் உட்­பட 35பேர் போட்­டி­யிட்­டனர். அதிலே தமிழ் மக்கள் ஓர் நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் ஒரு­வ­ருக்கு வாக்­க­ளித்­த­போதும் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­ன­வரும் வடக்­கிலும் கிழக்­கிலும் தமி­ழர்­களின் வாக்­கு­களில் இருந்தும் 75 ஆயிரம் வரை­யான வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார்

இருந்­த­போதும் "சிங்­கள மக்­களின் வாக்­கு­களால் தெரி­வான ஜனா­தி­ப­தி­யென விழித்­த­தாக பத்­தி­ரி­கைகள் கூறு­கின்­றன. அவ்­வா­றானால் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், மட்­டக்­க­ளப்பு போன்ற சிங்­கள மக்கள் வாழாத மாவட்­டத்தில் புதிய ஜனா­தி­ப­திக்கு வாக்­க­ளித்த மக்கள் அனை­வரும் சிங்­கள மக்­க­ளா­கவே கரு­தப்­பட்­டுள்­ளனர்.

இதே­போன்று ஜனா­தி­ப­தி­யாக பதவி ஏற்ற இடமும் துட்­ட­கை­மு­னு வால் அமைக்­கப்­பட்ட ஆலயம் எனக் கூறு­வதன் மூலம் றுகு­ணுவில் இருந்து வந்து தமிழ் மன்­ன­னான எல்­லாள மன்­னனை வீழ்த்­தி­ய­தனை ஞாப­க­மூட்­டு­வ­தற்­கா­கவே அதே றுகு­ணுவில் இருந்து வந்து எல்­லாள மன்­னனை அழித்த துட்­ட­கை­மு­னு­வினால் அமைக்­கப்­பட்ட ஆல­யத்தில் பதவிப் பிர­மாணம் இடம்­பெற்­றதா என்றும் வர­லாற்­றி­ய­லா­ளர்­க­ளிடம் அச்சம் ஏற்­பட்­டுள்­ளது.

நிலைமை இவ்­வா­றி­ருக்க இவை தொடர்பில் வாய் திறக்க தைரியமற்றவராகவோ அல்லது புதிய ஜனாதிபதி கூறிய வரைவிலக்கணத்துக்குள் அகப்பட்ட தனாலோ என்னவோ தவராஜா இது குறித்து  வாய் மூடி மௌனியாக இருக் கின்றார் என்றார்.