இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்: புகைப்படக் கண்காட்சி

Published By: J.G.Stephan

27 Nov, 2019 | 03:28 PM
image

(எம்.மனோசித்ரா)

'இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் ' என்ற தொனிப்பொருளிலான புகைப்படக் கண்காட்சி செவ்வாய்கிழமை இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்துவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு 07,  ஆர்.ஜி.சேனாநாயக்க மாவத்தையில் உள்ள சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இக்கண்காட்சி நேற்று (செவ்வாய்கிழமை) முதல் இன்று (புதன்கிழமை) வரை நடைபெறுகிறது.

நவம்பர் 26 ஆம் திகதி இந்திய அரசியலமைப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து, துணைத் தூதுவர் விநோத் கே ஜேக்கப்,  இங்கு சுட்டிக் காட்டியிருந்ததுடன் இந்திய ஜனநாயகத்துக்கு அடித்தளமிட்ட  அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை முதல் அதனை அங்கீகரித்தமை வரையிலும் விளக்கமளித்திருந்தார். 

அத்துடன் இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியங்கள் குறித்தும் இங்கு குறிப்பிட்டிருந்த  துணைத்தூதுவர் வலுவான, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான அடித்தளத்தை உருவாக்குவதில் அரசியலமைப்பின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்திருந்தார்.

இந்த புகைப்படக் கண்காட்சியில் அரசியலமைப்பு உருவாக்கம், அரசியலமைப்புச் சபையின் முதலாவது அமர்வு  மற்றும் இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி என அழைக்கப்படுபவரும் சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்டத்துறை அமைச்சருமான வைத்தியர் பி.ஆர்.அம்பேத்கர் உள்ளடங்கலாக அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரிதான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17