இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த எரங்கவின் பந்து வீச்சுப் பாணியில் சந்தேகம் எழுந்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீசப்பட்ட பந்து வீச்சிலேயே குறித்த சந்தேகம் எழுந்ததையடுத்து குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை அதிகாரிகளால், இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.