ஜெனிவா  தீர்­மா­னத்தை  அர­சாங்கம் மீள்­ப­ரி­சீ­லனை செய்யும் என்று    வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­த­னவும் ஜனா­தி­ப­தியின்  பேச்­சாளர்  கெஹெ­லி­ய­ரம்­புக்­வெ­லவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.


ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ  ஜனா­தி­ப­தி­யாக   பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து  பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ  தலை­மையில்   புதிய அர­சாங்கம்    அமைக்­கப்­பட்­டுள்­ளது.  அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்தல்   இடம்­பெ­றும்­வரை   இடைக்­கால அர­சாங்­கத்தின் 16 பேர் கொண்ட அமைச்­ச­ரவை கடந்­த­வாரம்  பத­வி­யேற்­றி­ருந்­தது.  


இதில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட  தினேஷ் குண­வர்த்­தன  நேற்று முன்­தினம்   அமைச்சில்  தனது கட­மை­களை பொறுப்­பேற்­றுக்­கொண்டார்.   இதன்­பின்னர்   செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­வித்த  அவர் ஐ.நா. மனித உரிமை பேர­வையில்  நிறை­வேற்­றப்­பட்ட  30/1 தீர்­மா­னத்தை   மீள்­ப­ரி­சீ­லனை செய்ய  அர­சாங்கம்  தீர்­மா­னித்­துள்­ள­தாக   குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.


இதே­போன்றே ஊட­க­மொன்­றுக்கு கருத்து தெரி­வித்­துள்ள  ஜனா­தி­ப­தியின் பேச்­சா­ளரும்  முன்னாள் அமைச்­ச­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல  ஜெனிவா தீர்­மா­னத்தை  அர­சாங்கம் மீள் பரி­சீ­லனை செய்யும்.  இந்த விடயம் தொடர்பில்  வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­தன  எதிர்­வரும் வாரங்­களில் ஐ.நா. மனித உரிமை பேர­வை­யுடன்  பேச்­சு­வார்த்­தை­களை   நடத்­துவார்.

ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­திற்கு  அன்­றைய  வெளி­வி­வ­கார  அமைச்சர் மங்­கள சம­ர­வீர தனிப்­பட்ட முறையில்  அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்தார்.  அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­களை  ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சர்­வ­தேச   நீதி­ப­தி­களை விசா­ர­ணையில் உட்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி  ஒரு­போதும் அனு­ம­திக்­க­மாட்டார் என்று  தெரி­வித்­தி­ருக்­கின்றார்.


ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷவின் தலை­மையில்  இடைக்­கால அர­சாங்கம்   அமைக்­கப்­பட்டு  சில தினங்­க­ளி­லேயே  ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில்   அன்­றைய இலங்கை  அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட   தீர்­மா­னத்தை   மீள்­ப­ரி­சீ­லனை செய்வோம்.

அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டோம்  என வெளி­வி­வ­கார அமைச்சர் உட்­பட  அர­சாங்க முக்­கி­யஸ்­தர்கள்    வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.


நாட்டில்  இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள்  யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில்     உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு   பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு  நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று   தொடர்ச்­சி­யாக   வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த அன்­றைய ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனுக்கு  இந்த  விடயம் தொடர்பில்   அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ    உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்தார். பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் உரிய  அக்­கறை செலுத்­தப்­படும் என்று அவர்  வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். இந்த விடயம் தொடர்பில் இரு­வ­ருக்­கு­மி­டையில் கூட்டு உடன்­ப­டிக்­கை­யொன்றும்  கைச்­சாத்­தி­டப்­பட்­டி­ருந்­தது.


இத­ன­டிப்­ப­டையில் மனித   உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில்   உரிய விசா­ர­ணைகள்  நடத்­தப்­ப­டா­மை­யினால்  ஐ.நா. மனித உரிமை பேர­வையில்   2012ஆம் ஆண்டு  முதன்­மு­த­லாக அமெ­ரிக்­காவின் அனு­ச­ர­ணை­யுடன்  இலங்­கைக்கு  எதி­ரான பிரே­ரணை  நிறை­வேற்­றப்­பட்­டது.  யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள், மற்றும்  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு  நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் இந்த பிரே­ர­ணையில்  வலி­யு­றுத்­தப்­பட்­டது.


இந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­ட­போ­திலும்  விசா­ர­ணை­களில் அன்­றைய அர­சாங்கம்  அக்­க­றை ­காண்­பிக்­கா­மை­யினால் 2013ஆம் ஆண்டு மீண்டும்   மனித  உரிமை பேர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.   இலங்­கையில்  மேற்­கொள்­ளப்­பட்ட  மனித உரிமை மீறல்கள்  மற்றும்  யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை வேண்­டு­மென்று  வலி­யு­றுத்­தப்­பட்­டது.   ஆனால் அதற்கும்   அன்­றயை அர­சாங்கம்  உடன்­ப­ட­வில்லை, ஒத்­து­ழைக்­க­வில்லை.  இதன்­கா­ர­ண­மாக  ஐ.நா. மனித உரிமை பேர­வையின்  சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்தும் நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது.  இதன்­பின்னர் 2014ஆம் ஆண்டும்  இலங்­கைக்கு எதி­ராக தீர்­மானம்  நிறை­வேற்­றப்­பட்­டது.


ஆனாலும்  அன்­றைய அர­சாங்கம் இவற்­றுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கா­மையின் கார­ண­மாக  பெரும் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.   இந்­த­நி­லை­யில்தான்  2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம்  8ஆம் திக­தி­ இ­டம்­பெற்ற  ஜனா­தி­பதி தேர்­தலில்   மைத்­திரி­பால சிறி­சேன   ஜனா­தி­ப­தி­யாக  தெரி­வு­ செய்­யப்­பட்­ட­துடன்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான   தேசிய அர­சாங்கம்  பத­வி­யேற்­றது.


இத­னை­ய­டுத்து  புதிய அர­சாங்­கத்­திற்கு   ஐ.நா. மனித உரிமை பேர­வை­யா­னது  ஆறு­மா­த­கால அவ­கா­சத்தை  வழங்­கி­ய­துடன்   பொறுப்­புக்­கூறும் விட­யத்தில்  ஒத்­து­ழைத்து­ செ­யற்­ப­டு­மாறு  அழைப்­பு­வி­டுத்­தி­ருந்­தது.  

இதற்­கி­ணங்­கவே  2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி  சர்­வ­தேச  நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய   உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ்  விசா­ர­ணை­களை நடத்தி   நீதியை நிலை­நாட்­ட­வேண்டும் எனக்­கோரும் 30/1 பிரே­ரணை  ஐ.நா. மனித உரிமை பேர­வையில்   நிறை­வேற்­றப்­பட்­டது.
இந்தப் பிரே­ர­ணைக்கு அன்­றைய அர­சாங்கம்  இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.  அன்­றைய  வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மனித உரிமை பேர­வை அமர்வில் கலந்­து­கொண்டு இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை  வழங்­கி­யி­ருந்தார்.  பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள  விட­யங்­களை முழு­மை­யாக அமுல்­படுத்­து­வ­தற்கும்  இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.


இந்தப் பிரே­ர­ணைக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­ய­போ­திலும்  இதனை  அமுல்­ப­டுத்தும் விட­யத்தில்  உரிய அக்­க­றை­யினை நல்­லாட்சி அர­சாங்­கமும்  காண்­பிக்­க­வில்லை.  அன்­றைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  வெளி­நாட்டு நீதி­ப­தி­களை  விசா­ர­ணையில் ஒரு­போதும்  ஈடு­ப­டுத்த முடி­யாது என்று   ஆணித்­த­ர­மாக கூறி­யி­ருந்தார். அத்­துடன் அர­சாங்­கத்­தி­லுள்ள  அமைச்­சர்­களும்  வெவ்­வேறு நிலைப்­பா­டு­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.


உள்­ளக விசா­ர­ணைக்­கான  பொறி­முறை கூட ஒழுங்­கான முறையில் அமைக்­கப்­ப­ட­வில்லை.  ஆனாலும்   அன்­றைய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வைத்து சர்­வ­தேச சமூகம்  முதலில் இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்­கி­யி­ருந்­தது.அதன்­பின்னர் மேலும் இரண்டு வரு­டங்கள்   அவ­காசம் வழங்­கப்­பட்­டது.   இந்த  கால அவ­கா­சத்­திற்குள் பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்ட சில விட­யங்கள் மட்­டுமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டன.  காணாமல் போனோ­ருக்­கான ஆணைக்­குழு    பெரும் இழு­ப­றிக்கு மத்­தியில்  அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­ப­ணிகள்  ஆரம்­பிப்­ப­தற்கே  பல­மா­தங்கள்  சென்­றி­ருந்­தன.


இதே­போன்று உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­குழு அமைக்­கப்­படும் என்று கூறப்­பட்­டி­ருந்­த­போதும் அந்த விடயம் கூட நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வாறு நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது   ஜெனிவா  பிரே­ர­ணையை நிறை­வேற்­றுவோம் என்று  உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­போ­திலும்    உள்­ளக விசா­ர­ணைக்­கான நட­வ­டிக்­கைகள்  கூட  உரிய வகையில் எடுக்­கப்­ப­ட­வில்லை.


அன்­றைய அர­சாங்­கத்தில்  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஒரு­த­ரப்­பா­கவும்  பிர­தமர்  ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான  அர­சாங்கம்     ஒரு­த­ரப்­பா­கவும் செயற்­பட்­ட­மை­யினால் அதனை ஒரு சாட்­டாக வைத்து   இழு­ப­றி­நி­லைமை தொடர்ந்து வந்­தது.  


தற்­போது மீண்டும் புதிய ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷவும்  பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக் ஷவும் பத­வி­யேற்று  புதிய  அர­சாங்கம் உரு­வா­கி­யுள்ள நிலையில்   மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி­ய­து­போன்ற செயற்­பாடு  இடம்­பெறும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.


இறுதி யுத்­த­கா­லத்­தின்­போது இடம்­பெற்ற சில சம்­ப­வங்கள் தொடர்பில்   கடந்த நல்­லாட்சி  ஆட்­சி­க்கா­லத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால் அந்த விசா­ர­ணை­க­ளுக்கும்  தடங்­கல்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. அவ்­வாறு  விசா­ர­ணை­களில்  ஈடு­பட்ட குற்­றப்­பு­ல­னாய்வு அதி­கா­ரிகள் கூட  தற்போது  அச்சமடையும் நிலைமை  உருவாகியிருக்கின்றது.  


இந்த நிலையில்  ஜெனிவா தீர்மானத்தையும்  மீள் பரிசீலனை செய்யப்போவதாக அரசாங்கத்தரப்பு கூறியுள்ளமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில்   முழுமையான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

இறுதி யுத்தத்தின்போது   பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களுக்கு  ஏதோ  ஒருவகையில்  நீதி வழங்கப்பட வேண்டும்.  அனைத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்று   கூறியபடி   எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கு   புதிய அரசாங்கம்  முயல்வதாகவே தெரிகின்றது.  இந்த விடயத்தில் ஐ.நா. மனித  உரிமை ஆணைக்குழுவின்  பிரேரணைகளுக்கு மதிப்பளித்து சர்வதேசத்தின்   ஒத்துழைப்புடன்   நீதியை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.  

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள்  இதற்கு ஏற்றவகையில்  அமையாவிட்டால்  மீண்டும் சர்வதேசத்தின் அழுத்தங்களை   சந்திக்கவேண்டிய நிலை  ஏற்படும்.  இதனைவிட பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை   வெல்வதற்கு    எதிர்காலத்திலும் சந்தர்ப்பம் ஏற்படாமல் போகும்   என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.


(27.11.2019 வீரகேசரி நாளிதழ் ஆசிரியத் தலையங்கம் )