(ஆர்.விதுஷா)
கடந்த அரசாங்கத்தினால் முறையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமையின் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கான காசோலைகளை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆசிரியர்களுக்கான சம்பளப்பிரச்சினைக்கான தீர்வும் இது வரையில் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கான காசோலை வழங்குவதில் சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து அவரிடம் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கான காசோலையையே கடந்த அரசாங்கம் வழங்கி வந்தது. இந்நிலையில் , சாதாரணமாக சீருடைக்கான காசோலை வழங்கும் பணிகள் மூன்றாம் தவணை இறுதியில் இடம்பெறும். ஆயினும் ஆட்சி மாற்றத்தின் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கான சீருடைக்கான காசோலை வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் முறையான வேலைத்திட்டம் இன்மையே இந்த சிக்கல் நிலைமைக்கு காரணமாகும். எதிர்வரும் 29 ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்கப்படவுள்ளது. ஆயினும், மாணவர்களுக்கான காசோலைகளை வழங்குவதற்கான எத்தகைய ஏற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை. பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றது. மாணவர்களுடைய அடுத்த வருட கல்வி நடவடிக்கைகளுக்கு இந்த விடயங்கள் சிக்கல் நிலைமையை தோற்றுவிக்கும் .
இவ்விடயம் தொடர்பில் புதிய கல்வி அமைச்சருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள உத்தேசித்திருக்கின்றோம். அவர் நாளை (இன்று) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இது தொடர்பில் கவனம்செலுத்தி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
இதேவேளை, ஆசிரியர்களுடைய சம்பளப்பிரச்சினை தொடர்பான விடயத்திலும் இழுபறி நிலைமையே காணப்படுகின்றது. அந்த பிரச்சினைக்கான தீர்வினை காணும் வகையில் கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட சம்பள முரண்பாடு தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழு இது வரையில் எந்த தீர்வினையும் எமக்கு பெற்றுத்தரவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM