வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையின் தவிசாளர் அலுவலகத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு ஈகைச்சுடறேற்றி அஞ்சலிக்கப்பட்டனர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி பங்கெடுத்தனர்.
இந்நிலையில், ஈகைச்சுடரினைத்தொடர்ந்து உரையாற்றிய தவிசாளர் தியாகராஜா நிரோஷ், எம் மண்ணில் இன ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழிமுறை ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது.
குறித்த ஆயுதப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தம் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நாம் நினைவுகூருகின்றோம். அவர்களது தியாகங்கள் ஈடு இணையற்றது.
இந்நினைவு கூரல் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும். போரில் இலட்சக்கணக்கான உயிர்களை மொத்தத்தில் இழந்துள்ளோம். அவர்களுக்காகவும் அஞ்சலிக்கின்றோம்.
அடிப்படையில் ஒவ்வொருவரும் தம் உயிரைத்தியாகம் செய்யும் போது அவர்கள் எமது மக்கள் சுபீட்சமாக சுதந்திரமாக வாழவேண்டும் என்ற உயரிய கனவைத்தான் கொண்டு மீளாத்துயில் கொள்கின்றனர்.
அந்த வகையில், உயிர் நீத்தவர்களை நினைவு கூறுகின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM