ஐ.தே.க.மாற்று வழி பற்றி சிந்தித்தே ஆகவேண்டும் - ரவூப் ஹக்கீம்  

Published By: R. Kalaichelvan

27 Nov, 2019 | 01:22 PM
image

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த ஐக்கிய தேசியகட்சி இனி அதன் கூட்டணிகளை பாதுகாத்துக் கொள்ளஅதன் கட்டமைப்பில் மாற்று வழி பற்றி அவசியம் சிந்தித்தாகவேண்டும்.

இதுவே இன்றைய தேசிய அரசியலின் புதியசமன்பாடாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்  தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் மஃரூப் மௌலவியின் தலைமையில் ஞாயிற்றுகிழமை நிந்தவூரில் நடைபெற்றகட்சி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

1994 ஆம் ஆண்டுமார்ச் மாதம் நடைபெற்றபிரதேசசபைத் தேர்தலின் போதுஅம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களின் ஒருசபையையேனும் தோல்விகண்டால் தன்னுடைய பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வதாக தலைவர் எம்.எச்.எம். அ‘்ரஃப் அப்போதுகுறிப்பிட்டார். எனினும் அந்தத் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபையும் நிந்தவுர்பிரதேசசபையும் தோற்கடிக்கப்பட்டன.

மாறாககடந்த ஆண்டு நடைபெற்ற நிந்தவுருக்கான பிரதேசசபையின் சகல வட்டாரங்களுக்குமானஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் வென்றெடுத்தது.

அதேபரந்துபட்ட ஆதரவை இன்னும் இன்னும் அதிகமாக்கிகடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்து எமது கரங்களைப் பலப்படுத்தியுள்ளனர்.

இந்த ஒற்றுமையானது இப்போது சமூகவலைத்தளங்களில் சிலரால் ஆபத்தானது என்று விமர்சிக்கின்றனர். ஆனால் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் மாற்றுத் தரப்புக்கு எதிராக ஏன் வாக்களித்தனர் என்பது பற்றி இங்குசிந்திக்கத் தவறிவிட்டனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் வடக்கு,கிழக்கு,மலையகம் உட்பட மஹிந்த ராஜபக்‘வுக்கு எதிராகவே வாக்களித்தனர். 2015 இல் இப்போக்குமேலும் பலமடைந்திருந்தது.

ஆக தொடர்ச்சியாக நடைபெற்ற 3 ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மைமக்கள் ஆணையானதுமஹிந்த ராஜபக்‘வுக்குஎதிராகவே இருந்துவந்தது. இந்தப் போக்கினை இப்போதைக்கு ஆபத்தானது என்று கூறுவது வேடிக்கையானது. ஆனால் இதனை வென்றதரப்பாகிய மஹிந்த ராஜபக்‘ அணியினரே ஆழமாகப் பரிசீலிக்கவேண்டும்.

அதனைப் போல இந்தக் கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியானது 2015ஆம் ஆண்டு மைத்திரி பால சிரிசேனவுக்கு கிடைத்த வெற்றியையும் பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும். மைத்திரி வெற்றியடைந்தது சிறுபான்மை மக்களின் ஏகோபித்தவாக்குகளினாலேயாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற அமைப்பு தற்போதைய அரசியலில் சிங்களப் பேரினவாதத்தின் முகவராகவேபார்க்கப்படுகின்றது. அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் வெற்றிபெறுவதைப் பற்றிகடந்த 5 ஆண்டுகளாகசிந்தித்துவந்துள்ளனர்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சியானது சிங்களப் பெறும்பான்மையின் ஆதரவானதுதமக்குஏன் கிடைக்கவில்லைஎன்பதுபற்றிசிந்தித்துநடவடிக்கைஎடுக்கவில்லை. மாறாகமஹிந்தமற்றும் கோத்தபய ஆகியோர்தனியே நின்று வெற்றியடையும் வைராக்கியத்துடன் இந்தத் தேர்தலில் களமிரங்கியுள்ளனர்.

இந்த நிலைமை தொடர்ச்சியடைந்தால் மட்டுமே சிறுபான்மையினங்களுக்கு ஆபத்தானது என்பதைத் தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

ஆனால் அவருடன் இருந்த சிறுபான்மையைச்  சேர்ந்த ஒருகும்பல் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்களாவர். எனினும் அவர்களே பட்டாசு கொளுத்தி மகிழ்கிறார்கள். ஆனால் நம்முடைய பிராந்தியங்களில் ஒற்றுமையின் மூலம் நாம் வெற்றியடைந்துள்ளதை மறந்து நம்மில் சிலர்சோர் வடைந்துள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தவர்கள் நாட்டுப் பற்றாளர்கள் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தவர்கள் நாட்டுப் பற்றாளர் இல்லையென்றும் இப்போது கூறத் தலைப்பட்டுள்ளனர். 

ஆனால் 2010 இல் மஹிந்த ராஜபக்ஷ வெற்றியடைந்தபோது இந்தநாட்டில் யாரும் சிறுபான்மையில்லை என்று குறிப்பிட்டது பலருக்கு ஞாபகம் இருக்கும்.

ஆகவேசிறுபான்மைமக்களைஅரவணைத்தால் மட்டுமேஅவர்களின் ஆதரவைப் பெற முடியுமே தவிற அதனை இராணுவ பலத்தினால் உருவாக்கமுடியாது.

ஏப்ரல் 21இற்கு பிறகு முஸ்லிம்களாகியநாம் அனைவருமே கட்சி பேதமின்றி பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் உள்ளடக்கிஅப்பாவிநாட்டுப்புறசிங்களமக்களிடம் அதனைஆழமாகவிதைத்துஅதன் உச்சபயனைதற்போதுஅடைந்துள்ளனர்.

முழு பிராந்தியத்திலுமேமதவாதம் தட்டியெழுப்பப்பட்டுகுறிப்பாக முஸ்லிம்களை இலக்குவைக்கும் போக்குதோற்றம் பெற்றுள்ளது. இந்தப் போக்கினால் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் நாட்டை ஆக்கிரமிக்கப் போகின்றார்கள் என்றுமக்களைஅவர்கள் அச்சப்படுத்தினர். இதுதேசியஅரசியலில் ஒருமாற்றத்திற்கான மிகப் பெறிய நாடகமாகும். இதைத் தான் எதிர்வரும் அடுத்ததேர்தலிலும் அவர்கள் சந்தைப்படுத்தவுள்ளனர். சிங்களமக்களிடையே இந்தப் பெரியஅலைஉருவாவதற்கு இந்தஅச்சஉணர்வேகாரணமாகும். பேரினவாதிகளும் ஊடகங்களும் இதையேசெய்தன.

ஆனால்,தேர்தலின் பின்னர் 1250 என்ற நிலையிலிருந்த ஜனாதிபதி பிரிவு பாதுகாப்பு அணியினர் 250 பேர் என குறைக்கப்பட்டுள்ளது. ஆக சென்ற மாதங்களில் உருவாக்கப்பட்டிருந்த அச்சமும் பீதியும் இப்போது திடீரென மறைந்துவிட்டதா என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டியுள்ளது. இதனை நாம் வேறு எவ்வாறு பொருள் கோடல் செய்யமுடியும். இந்தநாட்டின் அரசியலில் ஏப்ரல் 21இல் நிகழ்த்தப்பட்டதாக்குதலின் உண்மையானபரிமாணம் முழுமையாக காட்சிப்படுத்தப்பட்டது.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தோற்றுவித்த பிரலயத்தின் போதுரத்தனதேரரின் உண்ணாவிரதம் அரங்கேரிற்று. அதனால் ஒரு பேரழிவு உருவாக்கப்படுகின்றது என்பதனை கண்டு கொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமாசெய்ததன் மூலம் அதனைஉலகின் மனட்சாட்சிக்குதெரியப்படுத்தினோம். அதனால் முஸ்லிம்களுக் கெதிரானஅந்தப் பிரலயம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆனால் மிக அண்மையில் நடைபெற்ற இந்தசம்பவங்களையெல்லாம் நாம் மறந்துவிட்டோம்.

நமதுஅரசியல் வரலாற்றில் சரணாகதிஅரசியல் என்பதுசாத்தியமே இல்லாதஒருஅம்சமாகும். நமது இந்த முடிவை அரசு புரிந்து கொண்டு சிறுபான்மைமக்கள் மீதுஅடிக்கடிபாய்ச்சல் நடத்துவதைதடுத்துநிறுத்தவேண்டும்.

ராவனபலவேகய,பொதுபலசேனாஆகியஅமைப்புக்கள் மேலும் அவசியமற்றுப் போனதனால் கலைக்கப்படுவதாக தற்போதுஅறிவித்துள்ளனர். 

இவ்வியக்கங்கள் ஓர் அரசியல் மாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்புக்களாகும். கோட்டாபய ராஜபக்ஷ‘ அவர்கள் 2014 இல்  32 சிங்கள தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுவதாக அறிவித்திருந்தார். இதுபற்றி அவர்தற்போது அதிகம் சிந்தித்து ஆகவேண்டும்.

இதுவரை மிதவாத அரசியல் செய்த முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் தீவிரவாதத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என்று அறிக்கையிடுகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்துக்கு துணை போன சிலதனியார் ஊடகங்கள் மக்களைஅச்சப்படுத்திவருகின்றன.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தற்போதுசில ஜனரஞ்சகமாக நல்லவிடயங்களை அமுல் நடத்திவருகின்றார். அரச அலுவலகங்களில் அரசியல் தலைமைகளின் நிழற்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அவரின் போக்குவரத்தின் போதுபாதுகாப்புப் படையணி உபயோகப்படுத்துப்படுவதில்லை. ஜனாதிபதிக்கான உத்தியோக பூர்வவாசஸ் தளத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளாமல் தன்னுடைய சொந்த வீட்டிலேயே தொடர்ந்தும் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம். அதேவேளை இதனைவிட முக்கியமான சில ஜனரஞ்சகமான நடவடிக்கைகளை சிறுபான்மையினர் தொடர்பாக அவர் எடுத்தல் வேண்டும்.

முதலாவதாக சிறுபான்மை மக்களை அவர்அரவணைத்தல் வேண்டும். யுத்தவெற்றியின் பின்னர்ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க இன்னும் ஒரு எதிரிதேவைப்பட்டது போன்றே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்குகுறிப்பாக முஸ்லிம்கள் பலிக்கடாவாகமாறினர்.

குறுநிலமன்னர்களின் அரசியலை முஸ்லிம் சமூகம் முற்றாகநிராகரித்துவிட்டது. இதுஎமக்குக் கிடைத்தபாரியவெற்றியாகும். ஆட்சியாளர்மக்களின் இந்தசமூகஅரசியல் இயக்கங்களைநுட்பமாகஅவதானித்தல் வேண்டும்.

அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பாரியதொகையைஎம்மால் ஒதுக்கமுடிந்தது. ஆனால் இதற்குமுந்தியகாலங்களில் இந்தவாய்ப்புஎமக்குக் கிடைக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சி கூட அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தினாலும் நாட்டு மக்களிடையேஅது தொடர்பான பிரசாரம் போதியளவில் முன்னெடுக்கப்படவில்லை. 

அத்துடன் பிறநாட்டு ஊடுருவல்களுக்கு வழிவகை செய்ததாகவும் , ஐக்கிய தேசிய கட்சி மீதுமுத்திரைகுத்தப்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி வெளி நாட்டுச் சக்திகளுக்கு சோரம் போய்விட்டதாகவும் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. அப்பிரச்சாரங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் ஈடு கொடுக்கமுடியவில்லை.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இன்றையபிரதமர்பௌத்தவிகாரைகளுக்குச் சென்று இத்தகைய பிரசாரங்களில் ஈடுபட்டுவந்தார். அதற்குமேலும் உதவியாக அமைந்தது ஸஹரானின் தாக்குதலாகும்.

அந்தத் தாக்குதலின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட பீதி நிலைமையைவிட்டு முஸ்லிம் தலைமைகளைஅடக்கிஒடுக்கநினைத்தனர். அதனடிப்படையில் ஒருசரணாகதிஅரசியல் முஸ்லிம்கள் மீதுதிணிக்கப்பட்டது. எனினும் முஸ்லிம்கள் தங்களின் முழுமையானஒற்றுமையின் மூலம் சரணாகதிஅரசியலைநிராகரித்துவிட்டனர்.

தற்போதைக்கு நமது அரசியலின் எல்லாத் தரப்புக்களும் தங்களை மீள்வாசிப்பு செய்தாக வேண்டியகட்டத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவு என்பது தற்போது அடுத்த பிரச்சினையாக உருவாகியுள்ளது. மக்களின் உணர்வுகளும் இனி ரணிலோடு வரவேண்டாம் எனகட்டளையிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட ஐக்கிய தேசிய கட்சி தங்கள் குழப்பங்களை தீர்க்காது விட்டால் மீதியைதாங்கள் மஹிந்த ராஜபக்‘வுடன் பேசிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆகவேகட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்தபிளவைஅவர்கள் சரி செய்தாகவேண்டும்.

எவ்வாறாயினும் சிறுபான்மைமக்களின் உணர்வுகளை புதிய ஜனாதிபதி நன்கு புரிந்துகொண்டு தனது அடுத்தகட்ட அரசியலின் புதியவியுகத்தை திட்டமிட்டாகவேண்டும். அதுமாத்திரமின்றி சிறுபான்மை அரசியல் அமைப்புக்களும் தங்களுக்கான அடுத்தகட்ட அரசியலின் புதிய வியுகங்களை தடுமாற்றமின்றி திட்டமிட்டாக வேண்டும். அதுவே விவேகமானஅரசியல் வழிமுறையாக இருக்க முடியுமே 

தவிர சரணாகதி அரசியலைச் செய்யமுடியாது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் சரணா கதிஅரசியலைத் தவிர்த்துஆரோக்கியமான இயக்க அரசியல் வாய்ப்புக்கள் பற்றிசிந்திக்க வேண்டும். பதிலாக மாற்றமான முடிவுகளை எடுத்திருக்க வேண்டுமென்பது கேவலமானதாகும்.

முதலில் ஐக்கிய தேசிய கட்சி தன்னுடைய தலைத்துவமாற்றம் பற்றி தீர்க்கமான முடிவுகளை எடுக்கட்டும். அதன் பின்னர் சிறுபான்மை அடுத்தகட்டஅரசியல் பற்றியும் அடுத்ததேர்தலில் தனித்தா,பிரிந்தாஅல்லது கூட்டுச் சேர்ந்தா என்பதை சிந்திக்கமுடியும். விகிதாசார தேர்தல் முறையின் உச்சக்கட்ட பயனையும் முஸ்லிம்களின் காப்பீடு தொடர்பான உச்சகட்ட  ஊர்ஜிதப்படுத்தல் தொடர்பிலும் நாம் திட்டமிடல் வேண்டும். இந்தசெயற்பாட்டில் நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைத்துக்கொண்டுநம் பயணத்தை தொடருதல் வேண்டும் என்றும் அவர்குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08