யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளிருந்து பிற்பகல் 2 மணியுடன் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவரையும் வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் பணித்துள்ளது.

அனைத்துப் பீட மாணவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்தின் தடையையும் மீறி ஏற்கனவே ஏற்பாடு செய்ததற்கு அமைய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று பிற்பகல் 2 மணியுடன் மூடப்படுவதாகவும் அனைத்து உத்தியோகஸ்தர்களையும் வெளியேறுமாறு தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி, உள்ளக சுற்றறிக்கையின் ஊடாக பணித்துள்ளார்.