திருகோணமலை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை ஒரு கிலோ கஞ்சாவுடன் இன்று(27)அதிகாலையில் கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெவிக்கின்றனர்.

திருகோணமலை, அபேயபுர பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 20 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் குறித்த பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா மற்றும் ஹேரொயின் போதைப் பொருள் விற்பனை செய்து  வருவதாக திருகோணமலை போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவாலின் அடிப்படையில் ஒரு கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவரையும் திருகோணமலை நகரில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்