ஜனாதிபதி கோத்தாவுக்கு 10 இலட்சம் சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர் - அஸாத் சாலி

Published By: Digital Desk 3

27 Nov, 2019 | 12:46 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஜனாதிபதி மேற் கொள்ளும் நாட்டுக்கு நன்மையான விடயங்களுக்கு ஆதரவளிக்க பின்வாங்க மாட் டோம். கோத்தபாய ராஜபக் ஷவு க்கு 10 இலட்சம் சிறு பான்மை மக்களின் வாக்குகள்  கிடைக்கப் பெற்றிருக்கின்றன. என்றாலும் அதனை மறைக்க சிலர் முயற்சிக்கின்றனர் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றும்போது தான் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளால் மாத்திரமே வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தார். இது யாராவது அவருக்கு தெரிவித்ததையே அவர் குறிப்பிட்டிருக்கவேண்டும். கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு 10 இலட்சம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. அதனை மறைப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.

அதாவது, நாட்டில் இருக்கும் 7ஆயிரம் பிரதான விகாரைகள் ஊடாக ஒரு விகாரையில் இருந்து ஆயிரம் வாக்குகள் அடிப்படையில் வாக்குகளை பெற்றுக்கொள்ள தேர்தல் காலங்களில் தேரர்கள் நடவடிக்கை எடுத்ததாகவும் அதன் பிரகாரமே 69இலட்சம் வாக்குகள் கிடைக்கப்பெற்றதாகவும் ஒருசில தேரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் இனவாத அடிப்படையில் வாக்களிக்கவில்லை. அவ்வாறு வாக்களித்திருந்தால், ஹிஸ்புல்லாவுக்கோ சிவாஜிலிங்கத்துக்கோ வாக்களித்திருக்கவேண்டும். மாறாக தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த இனவாதம் மற்றும் தேசியவாத பிரசாரத்தில் சிறுபான்மை மக்கள் இனவாதத்துக்கு எதிராக செயற்பட்டு தேசியவாத கொள்கையில் இருந்த, சிறந்த பெளத்தரான சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்திருக்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தான் பதவி ஏற்கும்போது பல நல்லவிடங்களை தெரிவித்திருந்தார்.  அவற்றை நாங்கள் வரவேற்கின்றோம். குறிப்பாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி எனதெரிவித்து அந்த மக்களையும் இணைத்துக்கொண்டு செயற்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.இவ்வாறான நல்லவிடயங்களை யார் செய்ய முற்பட்டாலும் அதற்கு நாங்கள் ஆதரவளிக்க பின்வாங்கமாட்டோம்.

 நாட்டில் கடந்த காலங்களில் வைத்தியசாலைகளில் இடம்பெற்றுவந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டங்கள் இனி இடம்பெறாது என எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் இதுவரை காலமும் பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களை மேற்கொண்டுவந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருத்த பாதெனிய சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார். அப்பாவி மக்களை கஷ்டப்படுத்தி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றனர். கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தேவைக்கேற்றவகையில் செயற்பட்டிருந்தால் போராட்டங்கள் இடம்பெற்றிருக்காது எனறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33