ஐ.எஸ். தலைவர் பக்தாதியை கண்டுபிடிக்க உதவிய கோனன் என்ற மோப்ப நாய்க்கு பதக்கம் வழங்கி கெளரவித்த ட்ரம்ப்

Published By: Vishnu

27 Nov, 2019 | 12:19 PM
image

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவி புரிந்த கோனன் என்ற நாய்க்கு அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப் பதக்கம் அளித்து கெளரவித்துள்ளார்.

சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியை கடந்த மாதம் அமெரிக்க படைகள் கண்டுபிடித்து சுற்றி வளைத்தன.

தப்பிக்க வேறு வழியில்லாத நிலையில் அல் பாக்தாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்தார். இதன்போது அல் பாக்தாதியின் மறைவிடத்தை கண்டுபிடிப்பதில் அமெரிக்க ராணுவத்தின் மோப்பநாயான கோனன் முக்கிய பங்காற்றியது. 

அல் பாக்தாதியின் இருப்பிடத்தை மோப்பம் கண்டுபிடித்து, அவரை விரட்டி சென்றது. ஆனால் பாக்தாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் நாய் காயமடைந்தது.

இந்த நாயின் சேவையை வெகுவாக பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தனது டுவிட்டர் பக்கததில் அதன் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

மோப்ப நாய் கோனனை வெகுவாக பாராட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாக்தாதியை விரட்டியடித்து தற்கொலை செய்ய தூண்டிய தீரமான நாய் இதுதான் என கூறி அதன் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் குண்டு வெடிப்பு காயங்களில் இருந்து குணமடைந்த கோனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து டிரம்ப் பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களிடம் கோனனை அறிமுகம் செய்து உரையாற்றிய ட்ரம்ப்,  இந்த மோப்ப நாயை, தான் நேசிப்பதாக தெரிவித்தார். மேலும் கோனன் உலகின் ஆகச்சிறந்த நாய்களுள் ஒன்றாக திகழ்வதாகவும், இது தமக்கு பெருமையளிப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52