ஆராய்ச்சியாளரகளை வியக்க வைக்கும் வகையில் 18 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இறந்ந , உடலில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாத  நிலையில் இரண்டு மாத நாய்க்குட்டி ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எல்லை பகுதியான சைபீரியாவில் உள்ள பெர்மாஃப் ரோஸ்ட் பனி பிரதேசத்தில் இருந்தே 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்த இரண்டு மாத நாய் குட்டியே  மீட்கப்பட்டுள்ளது.

இறந்த நாய்குட்டியின் கண்கள் , உடலில் உள்ள முடிகள் என்பன பாதுகாப்பான நிலையில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டது நாய் அல்லது ஓநாய் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என சந்தேகிக்கும் ஆராய்ச்சியாளர்கள், பல வருடங்களுக்கு முன் அழிந்து போன நாய்கள் இனத்திற்கு இடையில் பிறந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் இந்த நாய் என்ன இனம் என்பது அடையாளம் காணப்படாத நிலையில் , ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆண்டு உலகின் மிக குளிர்ச்சியான நகரமான யாகுட்ஸ்கினின் வடகிழக்கில உள்ள ஆறு அருகே இருந்து பல வருடங்களுக்கு முன் இறந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.