சட்டவிரோதமாக 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தல பிரதேசத்தில் வைத்தே லொறியுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பெட்டிகளில் அடைக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட சுமார் 956, 670 ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளே குறித்த நபரிடம் இருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட நபர் 44 வயதுடையவர் எனவும் ,  எம்பிலிப்பிட்டியவில் இருந்து தம்புள்ள நோக்கி பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.