மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இன்றைய தினம் காலை 10 மணியளவில் நடைபெற்றது.