அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

27 Nov, 2019 | 09:42 AM
image

அல்பேனியா நேற்று செவ்வாய்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  23 ஆக அதிகரித்துள்ளது. 

அல்பேனியா நிலநடுக்கத்தை அடுத்து சில மணி நேரம் கழித்து, மற்றொரு நிலநடுக்கம் போஸ்னியாவை உலுக்கியது. இதனால் மீட்புப் பணிகள் மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் இருந்து சுமார் 45 பேர் மீட்கப்பட்டதாகவும், நாள் முழுவதும் 650 க்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் கூறுகையில், 30 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right