நாட்டில் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை வலியுறுத்திய யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரையில் படை வீரர்களால் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் இன்று  வவுனியாவை வந்தடைந்தது. 

 

யாழ்ப்பாணம் நயினாதீவில் அமைந்துள்ள நாக விகாரையில் ஆரம்பிக்கப்பட்ட சமாதானத்தை வலியுறுத்தும் குறித்த நடைப் பயணம் கதிர்காமத்தில் நிறைவடையுள்ளது.

படை வீரர்களினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடைப் பயணமானது இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

நான்காம் நாளான இன்று வவுனியாவை வந்தடைந்த இப்பயணம் இன்று மதவாச் சியை சென்ற டையவுள்ளது.