பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளதாக,  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாளைய தினம் இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் இடம்பெறவுள்ளது.

இவர்களின் பெயர் பட்டியல் கிடைத்த பின்னரே அதற்கான ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்த அவர். பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் இது வரையில் எவ்வித தகவல்களும் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.