இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னின்று செயற்பட வேண்டும் என இரா சம்பந்தன் தெரிவித்தார் 

திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா சம்பந்தன் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டார் இதன் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார் 

 இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் தொடர்பிலும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் செயற்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் இதன்போது  கருத்து தெரிவித்தார்

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னின்று செயற்பட வேண்டும் 

இதனைத்தான் இந்தியாவும் தெளிவாக கூறியுள்ளது இதனையொட்டி எமது நாட்டின் ஜனாதிபதி எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவிற்கு பயணம் செல்ல உள்ளார்

 நாம் வாக்களித்த வேட்பாளர் தோல்வி பெற்றுள்ளார் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்

எமது மக்களின் நீண்ட கால பிரச்சனை முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டது. இது விடயமான கருமங்களை நாம் கடந்த காலங்களில் செய்துள்ளளோம்

கடந்த ராஜபக்ச அரசாங்கத்திலலும் பல்வேறு கோரிக்கைகளை  நாம் முன்வைத்து பேசியுள்ளோம்

சர்வதேச சமூகத்திடமும் எமது நிலைமை ஒப்பிவிக்கப்பட்டுள்ளது

அக்காலகட்டத்தில் அமெரிக்கா ஜப்பான் போன்ற சர்வதேத்திற்கும் நாடுகளுக்கும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை

இதனடிப்படையில் அரசியல் சாசன மாற்றங்கள் செய்யப்பட்டன. அதனை மேலும் அபிவிருத்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

 நான் கூறியபடி ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டால் மாத்திரம்தான் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும்,

 தற்பொழுது இருக்கின்ற  அரசாங்கத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருப்போம் எதிர்க்கட்சியில் இருக்கின்றது என்பது ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல அவர்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் என்றும் அர்த்தம் இல்லை நல்ல விடயங்கள் நடந்தால் மக்களின் நலன் கருதி நாம் அதனை ஆதரிக்க தயாராக உள்ளோம் நல்ல விடயம் செய்யப்பட்டால் அதன்பின் நாம் எல்லோரும் நிற்போம்

 அதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில் தற்பொழுது ஒரு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார் எதிர்காலத்தில் இவருக்கு ஆதரவளிப்பது  தொடர்பாக உரிய நேரத்தில் நாம் தீர்மானம் எடுப்போம் என தெரிவித்தார்

 எனவே மேலும் காலதாமதம் செய்ய முடியாது எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.