சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 7 ஆவது இடத்தில் உள்ளார். 

சற்று முன்னர் சர்வதேச ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில்  திமுத் கருணாரத்ன 723 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணித் தலைவர் விராட் கோலி 928 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 877 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இதேவேளை டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் (472) முதல் இடத்திலும், இந்தியாவின் ஜடேஜா (406) இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் பென்ஸ்டோக்ஸ் (401) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

அத்துடன் டெஸ்ட் பந்து வீச்சாளர் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (907) முதல் இடத்திலும், தென்னாபிரிக்காவின் ரபடா (839) இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து அணியின் நீல் வோக்னர் (816) மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.