இலங்கையில் Oracle Day இன் போது Cloud ஐ காட்சிய்படுத்தியிருந்த ஒராக்கள்

Published By: Priyatharshan

31 May, 2016 | 10:12 AM
image

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதம பங்காளர்கள் இணைந்து பிராந்திய பேச்சாளர்களுடன் ஒராக்களின் துறைசார் சிறந்த செயற்பாடுகள் பற்றி உரையாற்றியிருந்தனர்.

Oracle Day  நிகழ்வின் போது ஒராக்கள் Cloud கட்டமைப்பை ஒராக்கள் ஸ்ரீ லங்கா காட்சிப்படுத்தியிருந்தது. 

இதில் பல்வேறு வகையான வாடிக்கையாளர்கள் வெவ்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தனர். 

மேலும், ஒராக்கள் பங்காளர் வலையமைப்பு (OPN) அங்கத்தவர்கள் இந்நிகழ்வின் போது ஒராக்கள் Cloud தீர்வுகளை தமது வாடிக்கையாளர்களுக்கு செயற்படுத்துவது தொடர்பில் அவர்களுக்கு செயற்படுத்திக் கொள்வதற்கு அவர்களின் இயலுமை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிக்காட்டியிருந்தனர்.

இந்நிகழ்வின் போது, cloud தொடர்பில் இலங்கை மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒராக்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தமது அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்து கொண்டனர். 

இதில் modernize big data, data warehousing, marketing மற்றும் digital processes ஆகியன உள்ளடங்கியுள்ளன. கலந்துரையாடப்பட்ட பிரதான தலைப்புகளில், டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் பரம்பல் மற்றும் நவீன cloud, ஒன்றிணைக்கப்பட்ட தரவு கட்டமைப்பை உருவாக்கல், எதிர்கால நவீன சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் அடையாளத்தின் வளர்ச்சி போன்றன அடங்கியிருந்தன.

இந்நிகழ்வின் பேச்சாளர்கள் ஒராக்களின் பரந்த cloud தீர்வுகளை அடையாளப்படுத்தியிருந்ததுடன், bigdata analytics, social, mobile மற்றும் IoT போன்ற பிரதான மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பின்பற்ற எவ்வாறு உதவுகின்றனர் என்பது பற்றி விளக்கமளித்திருந்தனர். 

மேலும், நிறுவனங்களுக்கு தமது செயற்பாடுகளை எவ்வாறு cloud க்கு கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும் என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தனர்.

ஓராக்கள் அண்மையில் புதிய ஒராக்கள் cloud சேவைகள் தெரிவை அறிமுகம் செய்திருந்தன. இதன் மூலமாக நிறுவனங்களுக்கு cloud க்கு தம்மை மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்திருந்தன. 

புதிய சேவைகளில் ஒராக்களின் நீடித்த cloud சேவைகளான stack –Software as a Service (SaaS), Platform as a Service (PaaS) மற்றும் Infrastructure as a Service (IaaS) போன்றன உள்ளடங்கியுள்ளன.

ஒராக்கள் பாகிஸ்தான் மற்றும் SAGE-W இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஆஹசென் ஜாவெட் கருத்து தெரிவிக்கையில், 

“தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு என்பது பெருமளவு மாற்றமடைந்து வருகிறது. வியாபாரங்கள் பெருமளவில் அதிகளவு பிரத்தியேகத்துவமடைந்து வருகின்றன. இவை பாதுகாப்பான cloud சேவைகளை நாடுகின்றன. 

இதன் மூலம் போட்டிகரமான சூழலில் முன்நோக்கி திகழ எதிர்பார்க்கின்றன. இந்த புதிய ஒராக்கள் cloud சேவைகள் மூலமாக தொழில்நுட்ப சேவைகள் வழங்குநர்களுக்கு துறையில் நெகிழ்ச்சியான, உறுதியான மற்றும் பாதுகாப்பான cloud கட்டமைப்புகளை இலங்கையிலுள்ள தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடியதாக இருக்கும்” என்றார்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனங்கள் cloud க்கு தம்மை பழக்கப்படுத்திய வண்ணமுள்ளன. இதன் மூலம் தமது வியாபாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளன. இலங்கையில் காணப்படும் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நிதிச் சேவைகள், தொலைத்தொடர்பாடல்கள், உற்பத்தி, நிபுணத்துவ சேவைகள், பொதுத் துறை மற்றும் கல்வி போன்ற துறைசார்ந்த இயலுமைகள் போன்றன இலங்கையில் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்த தீர்வுகளை வழங்க உதவியாக அமைந்திருக்கும்” என ASEAN ஒராக்கள் தீர்வுகள் ஆலோசனை தலைமை அதிகாரி ரகு பிரசாத் தெரிவித்தார்.

ஒராக்களின் நிறுவனசார் வளங்கள் திட்டமிடல் என்பது Cloud இன் நவீன பாவனையாளர் கட்டமைப்பாகும், இதன் மூலமாக embedded analytics, contextual social collaboration மற்றும் சாதனங்களிலிருந்து சுயாதீனமான மொபைல் அனுபவம் ஆகியவற்றை பாவனைக்கு இலகுவாக அமையச் செய்யும்.

ஒராக்கள் Cloud என்பது அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. 70+ மில்லியனுக்கு அதிகமான பாவனையாளர்களுக்கு உதவிகளை வழங்குவதுடன் நாளாந்தம் 34 பில்லியன் கொடுக்கல் வாங்கல்களுக்கு உதவியாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் காணப்படும் 19 டேடா நிலையங்களில் இது இயங்குகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58