Popliteal Cyst என்ற பாதிப்புக்குரிய சிகிச்சை

Published By: Daya

26 Nov, 2019 | 04:10 PM
image

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாளாந்தம் தங்களின் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி, மெல்லோட்டம், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு முழங்காலில் திடீரென்று வலி ஏற்படும். மேலும் சிலருக்கு முழங்காலுக்கு பின் சிறிய அளவில் கட்டிகள் கூட உருவாகக்கூடும்.

சிலருக்கு இதற்காக சிகிச்சை எடுத்தாலும் வலியும் குறைவதில்லை. கட்டியின் அளவு குறைவதில்லை. இவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை செய்தால் பாப்லிடியல் சிஸ்ட் எனப்படும் நீர் கட்டி இருப்பதை கண்டறியலாம்.

இத்தகைய கட்டிகள் மூட்டில் உள்ள சவ்வு பகுதி பழுதடைவதால் அதிலிருந்து தோன்றக்கூடும். வேறு சிலருக்கு விளையாட்டுகளின் போது, மூட்டு பகுதியிலுள்ள மெனிஸ்கஸ்ஸில் பாதிப்பு ஏற்பட்டு, விரிசலடைவதன் காரணமாக இத்தகைய நீர்க்கட்டி தோன்றுகின்றன.

சிலருக்கு மூட்டு வலி, மூட்டை வேறு புறம் திருப்ப முடியாத நிலை, சிகிச்சைகள் எடுத்தும் குணமடையாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். இத்தகைய அறிகுறிகளை வைத்து இவர்கள் எலும்பு மூட்டு சத்திர சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றால், அவர்கள் நவீன நுண்துளை சத்திரசிகிச்சை மூலம் இத்தகைய கட்டிகளை அகற்றி விடுவார்கள்.

மூட்டு வலியையும் குறைத்து விடுவார்கள். மூட்டை அசைக்க இயலும். ஆனால் அதன் பிறகு வைத்தியர்கள் தரும் அறிவுரையை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். இத்தகைய பாதிப்பு தொடக்க நிலையில் இருந்தால்... பூரண ஓய்வு, ஐஸ்கட்டி ஒத்தடம், இறுக்கமான பிரத்தியேக உறை ஆகியவற்றின் மூலம் நிவாரணமும் பெறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29