வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
நாளை புதன் கிழமை (27) தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மன்னார் மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு தூபி மற்றும் கற்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த நேரத்தில் மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் அதிகளவிலான இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ வாகனங்களும் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் குறித்த துயிலும் இல்லம் சிரமதான பணிகளின் போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் பலர் வருகை தந்து பொது மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் நினைவு கூறுமாறு தெரிவித்த நிலையிலும் நாளைய தினம் புதன் கிழமை மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM