வவுனியா ஓயார்சின்னக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,

இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் புகுந்து வீ்ட்டின் யன்னல் , கதவு போன்றவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். கூக்குரல் சத்தத்தைகேட்டு அயலவர்கள் அவ்விடத்திற்கு வருவதனை அறிந்த குறித்த நபர்கள் தாம் அணிந்திருந்த பாதணியினை அவ்விடத்தில் விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். 

இத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த திருச்செல்வம்(73), கலா(60)  கணவன் மனைவி ஆகிய இருவரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.