(எம்.மனோசித்ரா)

இந்திய கடற்படைக் கப்பலான ' நிரீக்ஷக் ' நேற்று பயிற்சிக்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலை கடற்படை மரபுக்கு ஏற்ப இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

துறைமுகத்திற்கு வந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் பெக்கி பிரசாந்த், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

இதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் பரிமாறிப்பட்டன.

பயிற்சி விஜயம் முடிந்ததும் இந்திய கடற்படைக் கப்பல் டிசம்பர் 03 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட உள்ளது.