இசையுலகில் சிறந்த முறையில் சேவையாற்றி வருவதற்காக ஏ ஆர் ரஹ்மானைப் பாராட்டி ஜப்பானிய நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான புகுவோகா (Fukuoka) விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய நாட்டைச் சேர்ந்த புகுவோகா என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவில் கலை கலாச்சாரம், கிராண்ட் மற்றும் அகாடமிக் துறையில் சிறப்பாக சேவையாற்றி வருவோரை தெரிவு செய்து, குறித்த விருதை வழங்கி கௌரவித்து வருகிறது.
இதில் , இந்த ஆண்டிற்கான விருதுகள் பெறுவோர் பட்டியலில் ஓஸ்கார் விருது, கிராமி விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று அதனை அலங்கரித்து வரும் ஏ ஆர் ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன் குறித்த விருதினை கிங்ஸ்லே முத்துமணி டி சில்வா (2001), செம்புகுட்டாராசிலாகே ரோலண்ட் சில்வா (2004) ,சாவித்ரி விமாலாவதி எல்லோபோலா குணசேகர (2007) ஆகிய இலங்கையர் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM