இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்­வரும் வெள்ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ புது­டில்­லிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.  

ஜனா­தி­பதி தலை­மை­யி­லான இந்தக் குழுவில் 8 பேர் இடம்­பெ­ற­வுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி.ஜய­சுந்­தர, முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித்­ வீ­ர­துங்க, வெளிவி­வ­கார அமைச்சின் செய­லாளர் ரவி­நாத ஆரி­ய­சிங்க ஆகி­யோரும் பாது­காப்பு அதி­கா­ரிகள் மூவரும் இந்தக் குழுவில் இடம்­பெ­ற­வுள்­ளனர். புது­டில்­லியில் இரண்டு நாட்கள் தங்­கி­யி­ருக்கும் ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ பிர­தமர் நரேந்­திர மோடி, வெளிவி­வ­கார அமைச்சர் ஜெய்­சங்கர் உட்­பட முக்­கிய அமைச்­சர்­க­ளையும் காங்­கிரஸ் கட்­சியின் தலைவி  சோனியா காந்தி உட்­பட பல­ரையும் அவர் சந்­திப்­ப­தற்கு ஏற்­பா­டா­கி­யுள்­ளது.

இன்­றை­ய­ தினம் இடம்­பெறும் முத­லா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தனது இந்திய விஜயம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.