டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் கனடாவை வீழ்த்தி ஸ்பெயின் 6 ஆவது முறையாகவும் சம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் 18 அணிகள் கலந்து கொண்டு மோதின. 

இதில் ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயின்-கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் ஒற்றையர் பிரிவில் முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாவ்டிஸ்டா அகுட் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் 19 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் அஜிரை தோற்கடித்தார். 

அடுத்து நடந்த ஆட்டத்தில் நம்பர் வன் வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 15 ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவாலோவை (கனடா) வீழ்த்தினார். 

இதன் மூலம் ஸ்பெயின் அணி 2-0 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தி 6 ஆவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.