முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லா எமது மக்களை இழிவுபடுத்திக் கூறியுள்ளார். இத்தகையவர்களின் முகத்திரையைக் கிழித்து மலையக மக்கள் என்றால் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களை இழிவுபடுத்திப் பேசுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எமது மக்களை படிப்பறிவு இல்லாதவர்கள் என்று கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அதே தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் அத்தாவுல்லா எமது மக்களை இழிவுபடுத்திக் கூறியுள்ளார். இத்தகையவர்களின் முகத்திரையைக் கிழித்து மலையக மக்கள் என்றால் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்நாட்டின் வளமான பொருளாதாரத்துக்கு தமது கடின உழைப்பை நல்கி எந்த விதமான சுபீட்சமும் இன்றி வாழ்ந்து வந்த மலையக மக்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். எதிர்நீச்சல் போட்டு தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். அதன் காராணமாக அவர்களின் பிள்ளைகள் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்று சமூகத்துக்கு அந்தஸ்தைத் தேடிக்கொடுத்து வருகின்றார்கள். நாமும் எமது மக்கள் தனி வீடுகளில் கௌரவமாக வாழ வேண்டும் என்று அரசியல் ரீதியில் காணி உரிமையை பெற்றுக் கொடுத்து வந்துள்ளோம்.
இவ்வாறு தலை நிமிர்ந்துள்ள, எமது சமூகத்தில் பிறந்து வளர்ந்த மலையக இளைஞர்கள் தமது திறமைகளின் ஊடாக நாட்டுக்கு பெருமை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் துபாய் நாட்டில் இடம்பெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட மலையக இளைஞன் மாதவன் ராஜகுமாரன் இரண்டாவது இடத்தைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்வி கற்ற எத்தனையோ பேர் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நாட்டிலுள்ள ஏனைய சமூகத்தவர்களுக்கு தாம் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எடுத்துக் காட்டி வருகின்றார்கள்.
எமது மக்கள் தோட்டம் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு மலையக மக்கள் என்ற பெருமையோடு வாழ வேண்டும் என்று நாம் பாடுபட்டு வருகின்றோம். பெரும்பான்மைச் சமூகம் எமக்குரிய அந்தஸ்தை வழங்கத் தயாராக இருக்கின்ற நேரத்தில் சிறுபான்மை சமூகத்தவர்களே கேவலமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்வதை நாம் சகித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருக்க முடியாது.
தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அதாவுல்லாவுக்கு உடனடியாக பதிலடி கொடுத்து எமது சமூகம் மானமுள்ள சமூகம் என்பதை பறைசாற்றியுள்ளார். அவரின் துணிச்சலுக்கும், சமூக உணர்வுக்கும் அனைவரது பாராட்டும் கிடைத்து வருகின்றது. அத்தோடு நாம் நின்று விடக் கூடாது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் அறியாமைக்கும் அகம்பாவத்துக்கும் தகுந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும். அதற்கான கண்டனக் கூட்டங்களை நடத்தி எமது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வைக்க வேண்டும்.
மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் ஒருவர் தோட்டங்களில் படித்தவர்கள் அதிகமாக இல்லை என்று கூறி இழிவுபடுத்தியுள்ளார். இன்னுமொருவர் வாடா, போடா என்று வாய்க்கு வந்தபடி பேசி உழைக்கும் மக்களை சீண்டிப் பார்த்துள்ளார். அவர்களின் முகத் திரைகளைக் கிழித்து அவர்கள் எத்தகையவர்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.
எந்தவொரு சமூகத்தையும் ஏளனமாக நோக்கினால் தகுந்த தண்டனை கிடைக்கும் என்பதற்கு மலையக சமூகம் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இன்று நாம் காட்டுகின்ற எதிர்ப்பும், கண்டனமும் எமது எதிர்காலச் சந்ததியினர் மானத்துடன் வாழ வழிவகுக்கும் என்பதை உணர்ந்து கருத்து பேதங்களை மறந்து சமூக ரீதியில் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக் கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM