ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மாநகர சபை சுத்திகரிப்பு ஊழியர்களினால் மஹரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட குப்பைகள் நேற்றைய தினம் இரண்டு மணிநேரத்திற்குள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டே, ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் இத்தாபன தம்மலங்கார மகாநாயக்க தேரரை ஜனாதிபதி சந்திக்க சென்ற வேளையிலேயே குறித்த பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இதன் பின்னர் மாஹரகம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அனைத்து ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் பேரில் மாநகர சபையின் சுத்திகரிப்பு ஊழியர்களினால் இரண்டு மணிநேரத்தில் அகற்றப்பட்டன.