ஐம்­பது ரூபா சம்­பள உயர்வு வழங்­காத கம்­ப­னியால் ஆயிரம் ரூபா சம்­பள ஏற்­றத்தை வழங்க முடி­யுமா ? புதிய ஐனா­தி­பதி சம்­பள உயர்வு குறித்து ஒரு கட்­ட­ளையை பிறப்­பிக்க  முடி­யுமா? என்ற வினாக்கள் தொக்கி நிற்­கின்­றன. முதலில்  முத­லா­ளியும், தொழி­லா­ளியும் நினைத்தால் அது முடியும். இடைத்­த­ரகு பேச்­சுக்கள், பேரி­ன­வாத கூக்­குரல்,  ஆண்டான் அடிமை, கருத்து மோதல்கள் நீங்­கி­னா­லேயே  போதும் சம்­பள உயர்வு கிடைத்­து­விடும்.

தோட்டத் தொழி­லா­ளியின் சம்­பள உயர்வு என்­பது எட்­டா­வது உலக அதி­ச­ய­மென  வட்ட மேசை மாநா­டு­களும் குளிர்ந்த அறை போத­னை­களும் சுட்­டிக்­காட்­டு­கின்ற  போதிலும் யாரோ தேன் எடுக்க எவரோ விரல் சூப்பும் பொழு­து­களே தொழி­லா­ளியை  சுரண்­டி­விடும்  நிமி­டங்­க­ளாகத் தெறிக்­கின்­றன தொழி­லா­ளியை  எப்­போ­துமே பசி­யோடு   வைத்­திரு.. - அதுவே அவனை  எப்­போதும் கூலி­யாக இருக்க ஒரே வழி என முத­லா­ளிக்கு  செவி­வழி ஓதி­விட்ட மந்­தி­ரமே தொழி­லா­ளிக்கு ஊதிய குறைப்­புக்கு அச்­சா­ணி­யாகும்.  இங்­கி­லாந்து, சீனாவில் ஏற்­பட்ட     புரட்­சிகள்  எல்லாம் உழைப்­புக்­கேற்ற ஊதியம் என்ற விழிப்­பு­ணர்வின் வெளிப்­பாடே ஆகும்.  ஆனால் மலை­யக தொழி­லாளி அவ்­வா­றான  யுத்­த­மொன்றை  ஊதிய உயர்­வுக்­காக செய்ய வேண்­டி­யதே இல்லை.

  

 இப்­போது தோட்டத் தொழி­லா­ளர்­க­ளாக  இருப்­ப­வர்­களை எழு­பதாம் ஆண்­டு­களில் இருந்த  தோட்­டங்­களை நோக்­கிய ஒரு பார்­வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அன்று  வெள்­ளைக்­கார துரைமார் மலை­ய­கத்தின் பல தோட்­டங்­களை முகா­மைத்­துவம்  செய்­தனர்.  பல தோட்­டங்­களைச் சேர்த்து குரூப் என்று நிர்­வாகம் செய்­தனர். தோட்டம்  ஒன்றில்  இரண்­டா­யிரம் வரை­யி­லான தொழி­லா­ளர்கள் கட­மை­யாற்­றினர். முத­லா­ளிக்கு இது நம் தோட்டம் என்ற உணர்வும்  தொழி­லா­ளிக்கு இது எங்கள் தோட்டம் என்ற பற்றும் நில­வி­யது.-   தேயி­லையை  அழிக்க வந்த தீய சக்­தி­களை முத­லா­ளியும் தொழி­லா­ளியும் விரட்­டி­ய­டித்த காலங்கள்  அவை.

  தொழி­லா­ளிக்கு  நல்ல உணவு உண்ண வேண்டும்.  மாசி, பருப்பு, நெத்­தலி,  பேரீச்­சம்­பழம்,  பால்மா,  மாமைட்,  சவ்­வ­ரிசி,  தேயிலைத் தூள் மாதாந்தம் இல­வ­சமாய்  கொடுக்க வேண்­டு­மென இங்­கி­லாந்து கம்­பனி தலை­மைக்கு அறி­வித்து செயற்­ப­டுத்­தி­யது. தோட்டம், மருத்­துவம், சுகா­தாரம்,  வீதி ஒழுங்கு,    பாதை சீர­மைப்பு என  ஒவ்­வொரு தோட்­டமும் ஒரு பூங்­கா­வாக  காணப்­பட்­டது. பிரித்­தா­னி­யரை வெளி­யேற்ற கொபே­க­டுவ என்னும்  அர­சி­யல்­வா­திக்கு சீனா சொன்ன புத்­தி­மதி தான் இன்­றைய தேயிலை சீர­ழி­வுக்கு  முதற்­கா­ரணம்.  

 இன்று கொழும்பில் சில கம்­ப­னிகள் இயங்­கு­கின்­றன.  தனது தொழி­லா­ள­ருக்கு உணவு, விடுதி வசதி, சீருடை,  போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன் 45, 000 ரூபா   சம்­பளம் வழங்­கு­கின்­றன.  அவை பெரிய ஏற்­று­மதி  நிறு­வ­னங்­க­ளு­மல்ல.  சவர்க்­காரம், விளை­யாட்டுப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருள் உற்­பத்தி செய்யும் நிலை­யங்­களே . எனவே அந்த கம்­ப­னிகள் 1500  ரூபா தின­சரி சம்­ப­ள­மாக வழங்க காரணம் தமது தொழி­லா­ளரை  மகிழ்ச்­சிப்­ப­டுத்­தவும்,  திருப்­தி­ப­டுத்­தவும் இடை­வி­ல­காது தொடர்ந்து ஊக்­கப் ­ப­டுத்தவுமே ஆகும்.

தோட்டத் தொழி­லா­ளியும் தோட்ட முத­லா­ளியும் ஒரே இடத்­தி­லி­ருந்து பேசு­வதன்  மூலம் தொழி­லாளி ஒரு நல்ல சம்­ப­ளத்தை பேசி முடிக்க முடியும்.  இது எல்லா தோட்­டங்­க­ளுக்கும் ஒரே சம்­பளம் என்ற விதி முறை களை­யப்­பட்டு சிறந்த   தோட்­டத்­திற்கு சிறந்த சம்­பளம் என்ற விதிக் கோட்­பாட்டை வலி­யு­றுத்­து­வ­தாக  அமையும்.  காடு­க­ளா­கிய அதே நேரம் பழைய தேயிலைச் செடி­களை கொண்­டி­ராத தோட்­டத்தில்  சிறந்த சம்­ப­ளத்தை  எதிர்­பார்க்க முடி­யாது, எதிர்­பார்க்­கவும் கூடாது. காடா­கிய தோட்­டத்தை காடாக விட்டு மீதி இருக்கும் தோட்­டத்தை சீர­மைப்­பதே  சிறந்­தது.    கண்டி,   றம்­பொடை,   இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து தொழி­லா­ளிகள் இடம்­பெ­யர்ந்து   தல­வாக்­க­லைக்கு வந்­ததும்,  வெல்­ல­வாய,  பெர­கலை, வெளி­மடை  தொழி­லா­ளிகள்    அப்­புத்­தளை வருகை தந்­ததும் 1974  இல் இடம்­பெற்­றன.  அதனை தொழிற்­சங்­கங்கள்  மறந்­தாலும் மர­வள்ளி தேடி அலைந்த எழு­பது வயது தாத்­தாக்கள்  நன்­க­றி­வார்கள் இதில் பெண் தொழி­லா­ளியின் சம்­பள உயர்வும் சாத்­தி­யமே.

  அவர்­களின் உழைப்பின் மூலமே கம்­ப­னிகள் இயங்­கு­கின்­றன . அவர்­களின் கண­வர்மார் கடை­களில், நக­ரங்­களில்,  கிரா­மங்­களில், மேசன் வேலை  செய்யும் முறை ஒன்­றுக்கு மாறி விட்­டனர் சரி­யான சம்­பளம் கிடைக்­கா­மையே  ஆண்கள் தோட்­டத்தை விட்டு வெளி­யேற கார­ண­மா­கி­யது. எனவே, பெண்­களும் வெளி­யே­றாமல் இருக்க வேண்­டு­மானால் அவர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் வழங்க வேண்டும்.

தேயிலைக் கொழுந்து பறிக்கும் இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட   உழைப்­பா­ளிக்கு நியா­ய­மான சம்­பள உயர்வை  வழங்­கு­வதே நியா­ய­மாகும்.  வெறு­மனே 25%   பெண்­க­ளுக்கு இடம்,  மகளிர் தினம்,  பெண்­ணிலை  சமத்­துவம் என எழு­து­வது, ஆய்வு செய்­வது எவையும் இவர்­க­ளுக்கு நன்­மை­களை  கொண்டு வரப்­போ­வ­தில்லை.

ஒரு பெண் 7 .30  மணிக்கு வேலைக்குச் செல்­கிறார். 9 .30 மணிக்கு கொழுந்து  நிறுக்­கப்­ப­டு­கி­றது.  அந்த இரண்டு மணி நேரத்தில் 10 கிலோ கொழுந்தை பறிக்கும் போது கம்­பனி நல்ல தொரு சம்­ப­ளத்தை வழங்க முன்­வரும் . எனவே,  ஒரு மணி நேரத்தில் 5  கிலோ என்றால் எட்டு மணி நேரத்தில் 40 கிலோ கொழுந்தை பறிக்க  வேண்டும்.  அந்த 40  கிலோ­வி­லி­ருந்து எட்டு கிலோ ஏற்­று­மதி தேயிலை தயா­ராகும்.  அதன் பெறு­மதி 8 x 500  =   4000 / =     எனவே நாலா­யிரம் ரூபா உழைக்கும் ஒரு  தொழி­லா­ளிக்கும்   ஒரு மணி­நே­ரத்­திற்கு  130 படி 1240  ரூபா சம்­ப­ளத்தை கம்­ப­னி­களால்  கொடுக்க முடியும்.  அந்த  சம்­பள அதி­க­ரிப்பு பற்றி பேச இலண்டன் ஒக்ஸ்போர்ட் அறிஞன் தேவை இல்லை, இந்த  சம்­பளம் என்­பது ஜனா­தி­பதி  கோத்­தா­பய சொல்­வதை விட  அதிகம் சஜித் கூறி­யதைவிட சற்று குறைவு ஆனால் ஞாயிறு,  போயா மேல­திக  கிலோ­வுக்கு ஐம்­பது ரூபா எனக் கணக்குப் போட்டால் 1500/=    நிச்­சயம் கிடைத்தே  தீரும்.  அதற்கு பெண்­களை கவ­னிக்க வேண்டும்.   .  அவர்­க­ளுக்கு சீருடை,  பகல்  உணவை கம்­பனி கொடுக்க முடியும்.  அவ்­வாறு நம்­பிக்கை யூட்டும் போது அறு­பது  கிலோவை பறிக்கும் தொழி­லா­ளி­களை உரு­வாக்க முடியும்.  பல தோட்­டங்­களில் இன்று கொழுந்து பறிக்கும் போட்­டிகள் இடம்­பெ­றும்­போது பெண்கள் எந்­த­ள­விற்கு இதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர் என்­பதை ஆராய வேண்டும்.

இன்றும் பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் பல பிர­தே­சங்கள் கொழுந்து விளையும்  தோட்டங்களாக காணப்படுகின்றன.  அங்கு தமிழ்,  சிங்கள பெண்கள் தினமும் ஐம்பது  முதல் எழுபது கிலோவரை கொழுந்து பறிக்கின்றனர்.  இவ்வாறு திறமையுள்ள பெண்  தொழிலாளிக்கு 1200  ரூபா சம்பளம் வழங்குவது கம்பனிகளின் தார்மீகக் கடமையாகும்.  தேயிலை விலை போகவில்லை,  கம்பனி நட்டம் எனப் பொய்களை சொல்லும்  முதலாளிமார் அதை  புதிய ஜனாதிபதியிடம் கூறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவரை முதலாளிமாரும் ஏன் தொழிற்சங்கங்களும் கூட ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டால் சரி.  

- எல்லை ஆனந்தன்