ஆடைகள் எதுவுமில்லாமல் பிறந்த மேனியுடன் வீதியோரம் உலாவித்திரிந்த இளைஞனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடை பேக்கரி வீதியில் நேற்று முன்தினம் இரவு இளைஞன் ஒருவன் ஆடையின்றி நடமாடியுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சனநடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் குறித்த பகுதியில் இளைஞன் ஒருவன் ஆடைகள் எதுவுமின்றி பிறந்தமேனியுடன் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார். 

அவ்வாறு சுற்றித்திரிந்த காட்சி அப்பகுதியில்  அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி கமெராவில் பதிவாகியுள்ளது. 

குறித்த சீ.சீ.ரீ.வி காணொளியினை கண்டு கொண்ட உரிமையாளர் பொது மக்களின் உதவியுடன்  அவ் இளைஞனை அடையாளம் கண்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இளைஞனை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.