சட்டவிரோதமான முறையில் மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட 42 கொள்கலன்களில் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெறுவதற்கு பிரிட்டன் முடிவுசெய்துள்ளது.

முறையான அனுமதி இல்லாது நூற்றுக்கணக்கான கொள்கலன்களில் வந்த பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் பிரிட்டனலிருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கடந்த மார்ச் மாதம் வரை மலேசியாவின் பினாங்கு துறைமுகத்திற்கு முறையான அனுமதி இல்லாது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குறித்த 42 கொள்கலன்களில் அடங்கிய பிளாஸ்டிக் கழிவுகளை திரும்பப் பெறுவதற்கு பிரிட்டன் முடிவுசெய்துள்ளதாக மலேசியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.